புதுச்சேரி ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை.. முதலமைச்சர் ரங்கசாமி சொன்ன அதிரடி பதில்
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் மற்றும் சபாநாயகர் தலையீடு இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக தெரிவித்தார். மேலும் விமான நிலைய கட்டுமான பணிகள் 400 கோடி ரூபாய் அளவில் நடக்கும் எனவும் கூறினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்றத்தில் அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும், அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பவும் பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இவ்வாண்டு தீபாவளி நல திட்ட பொருட்கள் நேரடி பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி 10 கிலோ 2 கிலோ சர்க்கரைக்கான தொகையும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்றும், அதோடு 4 மாத கால இலவச அரிசிக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கியில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது இதற்காக ரூ 43 கோடியே 85 லட்சம் லட்சம் நிதி நிதி அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதையும் படிங்க..உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!
தொடர்ந்து பேசிய அவர், கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ 3500, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்றும், இவையும் பணப்பரிமாற்றம் மூலமே வழங்கப்படும் என்றார். மேலும் அரசு நிறுவனமான பாண்லே தனியார் மயமாக்கப்படாது என்றும், நிச்சயமாக கூட்டுறவு நிறுவனமாக தொடரும் என கூறிய அவர், புதுச்சேரி வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ 2,000 கோடி நிதி வேண்டும் என பிரதமரிடமும் கேட்டிருந்தோம்.
அவர்கள் பட்ஜெட் மறுமதிப்பீட்டில் இந்த தொகை தருவதாக சொல்லி இருந்தார்கள் அதற்கான கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளரும், நிதி செயலாளரும் பங்கேற்றார்கள் இதில் ரூ 1400 கோடி கூடுதலாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதில் புதுச்சேரி விமான நிலைய விரிவிக்கத்திற்கு 400 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடக்கும் என முதல்வர் தெரிவித்தார்.
இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ
மேலும்மழை காலத்தில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைககளையும் எடுத்து வருகிறது என்றும், அதனால் இந்த ஆண்டு மழை நீர் பெரிய அளவில் தேங்காது எனவும் கூறிய அவர், புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் தலையீடு இல்லை என றும்,அனைவரது ஒத்துழைப்புடன் தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும் என ரங்கசாமி கூறினார்.
இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?