உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!
இலங்கையில் உயிரிழந்த ஒருவருக்கு குரங்கு ஒன்று இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம், ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். மனிதர்கள் செய்யும் பல வேலைகளை பார்த்து குரங்குகளும் அப்படியே செய்யும். அதுமட்டுமல்ல சில நேரங்களில் மனிதர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு சில விஷயங்களை செய்யும்.
இலங்கையில் உள்ள தாளங்குடா பகுதியை சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன். இவருக்கு வயது 56 ஆகும். இவருக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் காட்டிலிருந்துவந்த குரங்கு ஒன்றிற்கு தினமும் பிஸ்கட் வழங்கிவந்துள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை பீதாம்பரம் ராஜன் இறந்துள்ளார். அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது.
இதையும் படிங்க..தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
உடலை வீட்டில் அஞ்சலிக்காக வைத்திருந்தபோது, தனக்கு உணவளித்துவந்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவர் உடல் அருகே சென்று அவருக்கு சுவாசம் உள்ளதா என பரிசோதித்ததுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப முயற்சி செய்தது.
பிறகு அவரது மாலையை உருவியது. அடுத்து அந்த குரங்கு இறந்த நபருக்கு முத்தம் கொடுத்து கட்டித்தழுவி, கண்ணீர் சிந்தியது. இந்த காட்சியை நேரில் காண்போரை நெகிழ வைத்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க..‘சிங்கார சென்னை 2.0 முதல் 2,607 அறிவிப்புகள் வரை.. சொல்லாததையும் செஞ்சுருக்கோம்.! மாஸ் காட்டிய ஸ்டாலின்’