Asianet News TamilAsianet News Tamil

சுங்கச்சாவடி கட்டணம் அதிரடி உயர்வு... வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் 4 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
tollgate Excise Duty on Customs
Author
Tamil Nadu, First Published Sep 2, 2019, 12:07 PM IST

வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் 4 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாவடிகளில் கட்டணம் உயர்வு சென்னை தடா மார்க்கத்தில் உள்ள நங்கநல்லூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு.  திண்டிவனம் உளுந்தூர் பேட்டை மார்க்கத்தில் உள்ள விக்கிரவாண்டி, திண்டுக்கல்- சமயநல்லூர் இடையே உள்ள கொடைரோடு சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.  tollgate Excise Duty on Customs

மதுரை- தூத்துக்குடி இடையே உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சேலம்- உளுந்தூர் பேட்டை மார்க்கத்தில் உள்ள மேட்டுப்பட்டி சிங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி -திண்டுக்கல் மார்க்கத்தில் உள்ள பொன்னம்பலப்பட்டியிலும் கட்டணம் உயர்த்தபபட்டுள்ளது. தஞ்சை - திருச்சி மார்க்கத்தில் உள்ள வாழவந்தான் கோட்டையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக வாகனத்திற்கு ரூ.85 இருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.tollgate Excise Duty on Customs
 
லாரி, பேருந்துக்கு ஒருமுறை செல்லும் கட்டணம் 170ல் இருந்து 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் 400க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்திக்ல் 40க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள ஒப்பந்தம் இருக்கிறது. கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios