’கொரோனா வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம்தான் பரவியிருக்கிறது. அப்படியானால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை 14 நாட்கள் நீங்கள் பாத்து காத்திருந்து, அதற்கு பிறகு அவர்களை வெளியில் விட்டிருந்தால் 130 கோடி பேர் வீட்டில் நாங்கள் அடைபட்டு இருக்க மாட்டோம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எத்தனை பேர் இருப்பான்? 10 லட்சம் பேர் அல்லது 20 லட்சம் பேர் இருப்பானா? வெளிநாட்டில் பரவி விட்டது.

 அப்போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அனைவரையும் இங்கு வைத்து பாதுகாப்பதற்கான செட்டப் நம்மிடம் கிடையாது. அதற்கான மருத்துவ கட்டமைப்பு, காவல்துறை கட்டமைப்பு நம்மிடம் இல்லை. திருடனை பிடிப்பார்கள். அதே நேரத்தில் ஒருவன் நோயாளியாக இருக்கிறானா? அவனது வீட்டை பாதுகாப்பது காவல் துறையின் வேலை கிடையாது. அப்படியானால் நீங்கள் என்ன செய்து இருக்க வேண்டும்? வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி பதினான்கு நாட்கள் கழித்து விட்டிருந்தால் நாங்கள் 130 கோடி பேர் சிறையில் இருப்பதைப்போல் வீட்டில் இருக்க மாட்டோம்’’ எனக் கொரோனா குறித்து கதறி இருந்தார் மே.17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி. 

இப்படியெல்லாம் அறிவுரை சொன்னால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த அவர், இப்போது கொரோனாவில் இருந்து மக்களை காக்க ஆலோசனை கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர், ‘’இடுக்கண்களை” கொரோனாவிலிருந்து மீட்கும் தற்சார்பு சிந்தனைகளை எதிர்பார்க்கிறோம். 

பேரிடரை எதிர்கொள்ள, பேரிடருக்கு பின் சமூகத்தை மீட்டெடுக்க உங்களது புதிய யோசனைகள், வழிகாட்டுதல்கள், தகவல்கள் ஆகியவற்றை மக்களிடம் சேர்க்க விரும்புகிறோம். tnrespond@gmail.com.8939256289- மே17 இயக்கத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.