அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி.? விருதுகள் ரத்து செய்யப்படும்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அதிமுக ஆட்சியில் தகுதியற்றோருக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது திரும்ப பெறப்படும் எனக் கூறிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது

Tamil Nadu government has announced that Kalaimamani award given to ineligible persons will be withdrawn

கலைமாமணி விருது- நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக அரசு சார்பாக கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விருதுகள் அவரச கோலத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக நெல்லை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்  தான் நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளதாகவும், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எனது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2017ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமிழகம் வருகையில் பாதுகாப்பு குறைபாடா..? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சைலேந்திரபாபு

Tamil Nadu government has announced that Kalaimamani award given to ineligible persons will be withdrawn

தகுதியற்றவர்களுக்கு விருது..?

தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி மற்றும் கலைமுதுமணி விருதுகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கலைமாமணி விருதுக்கு வயது வரம்போ, தகுதியோ, நெறிமுறைகளோ இல்லையென தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான விருதை கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விருதில் தகுதியில்லாத பலருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கலைமாமணி விருதுக்காக வழங்கப்பட்ட சான்றிதழில் உறுப்பினர்-செயலர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் அவசர கதியில் வழங்கியுள்ளனர். எனவே, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதை திரும்ப பெறுமாறு உத்தர விட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு..! குஷ்பு, நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்

Tamil Nadu government has announced that Kalaimamani award given to ineligible persons will be withdrawn

தமிழக அரசுக்கு பாராட்டு

இந்த மனுவிற்கு பதில் அளித்த தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் - செயலர் விஜயா தாயன்பன், கடந்த அதிமுக ஆட்சியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டவர்களின் தகுதிகள் மற்றும் அவர்களது கலைப்பணி அனுபவம் குறித்தும் நிபுணர் குழு ஆராயும் என தெரிவித்தார். விருது பெற்றவர்களில் தகுதியற்றவர்கள் என தெரியவந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது திரும்ப பெறப்படும்.விருதுகள் ரத்து செய்யப்படும்  என கூறினார். இதனையடுத்து நீதிபதிகள் தமிழக அரசின் துரிதமான நடவடிக்கை பாராட்டு தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலக கூட்ட அரங்கிற்கு ஜானகி, ஜெயலலிதா பெயர் சூட்டப்படும்..! திடீர் அறிவிப்பு வெளியிட்ட ஓபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios