பிரதமர் தமிழகம் வருகையில் பாதுகாப்பு குறைபாடா..? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சைலேந்திரபாபு
பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு தொடர்பான எந்த புகாரும் தமிழக காவல்துறையில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி
தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் தமிழகம் வந்த போது பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான நிலையில் இல்லையென குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி, நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு சென்னை வந்திருந்தார். இதன் தொடக்கவிழா நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாநில முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநில அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் 180 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அரங்கத்திற்கு வந்திருந்தனர்.
அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.! நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம்- செல்லூர் ராஜூ
மெட்டல் டிடெக்டர்கள் சரியான நிலையில் இல்லை
தமிழகம் போன்ற உணர்வுப்பூர்வமான மாநிலத்தில் குறிப்பாக நமது பாரத பிரதமர் வருகை தருகிறார் என்ற போது, பல உயரதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்ற போது, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமாகிறது. பாதுகாப்பு ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கையடக்க மெட்டல் டிடெக்டர்கள், டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் வெடிகுண்டு கண்டறிதல் கருவிகள் ஆகியவை முறையாக இல்லாததால், பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் இருந்ததும், பராமரிப்பு மற்றும் மாற்றியமைக்க காலதாமதம் ஏற்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.
நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு..! குஷ்பு, நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்
சைலேந்திரபாபு விளக்கம்
இவ்விவகாரம் குறித்து பாரபட்சமற்ற, விசாரணை நடத்தி, தவறிழைத்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, பாதுகாப்பு குறைப்பாடு குறித்து எந்த ஒரு அரசு துறையும் எங்கள் கவனதிற்கு கொண்டுவரவில்லை. பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு தொடர்பான எந்த புகாரும் தமிழக காவல்துறையில் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. நூறு ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் உள்ளது.தமிழக காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது. அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்வதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்