அதிமுக அலுவலக கூட்ட அரங்கிற்கு ஜானகி, ஜெயலலிதா பெயர் சூட்டப்படும்..! திடீர் அறிவிப்பு வெளியிட்ட ஓபிஎஸ்
சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி திருமதி வி.என். ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா
அதிமுக அலுவலகத்தில் உள்ள அறைகளுக்கு மறைந்த முதலமைச்சர் ஜானகி மற்றும் ஜெயல்லிதாவின் பெயர்கள் சூட்டப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மறைந்த திருமதி வி.என். ஜானகி அம்மையார் அவர்களின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தினையொட்டி அவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் வணக்கத்திளையும், மரியாதையையும் முதற்கன் தெரிவித்துக் கொள்கிறேன். “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்" என்று சொல்வார்கள். இதனை நிரூபித்துக் காட்டியவர் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள்.
அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.! நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம்- செல்லூர் ராஜூ
அதிமுக அலுவலகத்திற்கு நிலம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நோய்வாய்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும், அபெரிக்காயில் உள்ள புருக்லின் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டபோதும் சரி, அதற்குப் பின்னாலும் சரி அவருடனேயே இருந்து அவரை கண் இமை போல் காத்த பெருமைக்குரியவர் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள். தமிழக மக்களின் நலன்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்த வள்ளல் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள். இந்த இடத்தில்தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைமைக் கழகம் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை" என்ற பெயரில் இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது.
கட்சி தான் பெரியது
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்கு முன்பே, 29-07-1987 அன்று அந்தக் கட்டடத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரில் பத்திரப் பதிவு செய்த பெருமைக்குரியவன் திருமதி ஜானகி அப்மையார் அவர்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரு பிரிவுகளாக செயல்பட்டதன் காரணமாக, புரட்சித் தலைவர் கண்டெடுத்த வெற்றி சின்னமாம் “இரட்டை இலை” சின்னம் முடக்கப்பட்டது. இருப்பினும், 1989 ஆம் ஆண்டைய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின், "தனிப்பட்ட ஆள் எவ்வளவுதான் அறிஞராக இருந்தாலும், வீரராக இருந்தாலும் கட்சி பெரிதே தவிர தனிப்பட்ட ஆளல்ல" என்ற போறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, “கட்சிதான் பெரிது” என்ற அடிப்படையில்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தோற்றுவித்த கட்சி தொடர்ந்து மக்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும், புரட்சித் தலைவரின் நொண்டர்கள் ஓரணியில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், கட்சியையும், கட்சி அலுவலகத்தையும், சிள்ளத்தையும் "வெற்றி வீராங்கணை" மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு சென்ற பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள். கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு செயல்பட்ட திருமதி ஜானகி அம்மையாரின் புகழ், அவர் செய்த தியாகம் என்றென்றும் அனைவர் உள்ளங்களிலும், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும்.
அதிமுக அலுவலக அறைக்கு ஜானகி பெயர்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் தரை தளத்தில் உள்ள முக்கியப் பிரமுகர் அறைக்கு திருமதி வி.என். ஜானகி அம்மையார் அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும், முதல் தளத்தில் உள்ள கூட்ட அறைக்கு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கழகத் தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என்னிடம் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள் வெகுதாரத்தில் இல்லை என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தில், உரிய அனுமதி பெற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி திருமதி வி.என். ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு..! குஷ்பு, நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்