திமுக மாணவரணி சங்கர் பெண் ஹாக்கி வீரர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹாக்கி பயிற்சியாளரும், அவர் உதவியாளரும்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் தனியார் ஹாக்கி பயிற்சி மையம் ஒன்று கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஹாக்கி பயிற்சி மையத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு, ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதே பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஹாக்கி மையத்தின் பயற்சியாளராக இருந்து வருகிறார்.இவர் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் இவர்.  

இந்நிலையில், ஹாக்கி பயிற்சியாளர் சங்கர் மற்றும் அவரது உதவியாளர் கண்ணன் ஆகியோர், பாலியல் தொல்லை கொடுப்பதாக பயிற்சி மாணவி ஒருவர், காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த காரைக்குடி காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி சங்கர் மற்றும் அவரது உதவியாளர் கண்ணன் இருவரையும் கைது செய்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ஒருவர் தன் பெண் பிள்ளைகள் ஹாக்கியில் சிறப்பாக விளையாடுவதால் அவர்களுக்கு மேலும் கூடுதல் பயிற்சி அளிக்க முடிவு செய்தார்.இதனால் உடுமலைப்பேட்டையில் இருக்கும் தனது நண்பர் மூலம் காரைக்குடி பள்ளத்தூர் குமரன் என்பவர் மூலமாக ஹாக்கி டீம் மேனேஜர்  சங்கர் அறிமுகமானார். சங்கர் தன் வீட்டில் ஏற்கனவே பயிற்சிக்காக இருக்கும் பிள்ளைகளுடன் சேர்த்து இந்த பிள்ளைகளையும் தங்க வைத்துள்ளார்.அப்போது இரண்டு பிள்ளைகளையும் தன் ரூம்பிற்கு அழைத்து முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தால் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.