உலக நாயகன் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். கமல் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. இந்தக் கட்சியில் சினிமா பிரபலங்கள் ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன், இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். 

நேரடியாக கட்சியில் யாரும் உறுப்பினராக இல்லாவிட்டாலும், கமலுக்கு சினிமா உலகில் நிறைய சப்போர்ட் எப்போதுமே இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் யாரும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளனர்.

ஒருபக்கம் நடிகர்கள் நடிப்பில் கிடைக்கும் புகழை தக்க வைத்து கொள்ள சினிமாவில் ரிடையர் ஆனவர்கள் எல்லாம் அரசியலுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் கவர்ச்சி நடிகை ஷகீலாவும் இணையவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய நடிகை ஷகிலா, நான் குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த எல்லாத்தையும் பிடுங்கி கொண்டார். 

அதனால் தற்கொலை முயற்சியில் கூட இறங்கினேன். நிறைய படங்களை நான் விரும்பி பார்ப்பேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கிற நேரத்தில் எல்லாம் அவருடைய படங்களைத்தான் விரும்பி பார்ப்பேன். அவரது கட்சியில் சேரவும் ரொம்ப ஆர்வமாக  இருக்கிறேன் என்றார்.