பெரியார் அறக்கட்டளை சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு சொந்தமானது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியார்களை சந்தித்த அவர், ’’பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் பெரியார் அறக்கட்டளை சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும். நீதிமன்றத் தீர்ப்புப்படி ரஜினியை ஒன்றும் செய்ய இயலாது. அவரை மிரட்டுவது எடுபடாது. திராவிடர் கழகத்தினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயுதம் இல்லாமல் இருக்கிறார்கள்.

1971ல் நடந்த சம்பவத்தை ரஜினி கூறியிருக்கிறார். அதற்கு ஏன் அவரை மிரட்ட வேண்டும்? இவர்களின் மிரட்டல்களுக்கு என்னைவிட யாரும் அதிக அள்வில் உட்பட்டவர்கள் கிடையாது. இவர்களுடையது ஊள மிரட்டல். அதனால்தான் பெரியாருக்கு எதிராக ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். இந்த மிரட்டல்கள் எல்லாம் அவரை ஒன்றும் செய்ய முடியாது. 

அன்றைக்கு இந்துவுக்கு விரோதமாக செயல்பட்டதை ஆமாம் என்று ஒப்புக் கொண்டார்கள். இன்றைக்கு அய்யய்யோ நாங்க செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதன் மூலம் என்ன தெரிவிகிறது என்றால், இந்து எழுச்சியை கண்டு அவர்கள் பயந்து விட்டதை காட்டுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

பெரியார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை திராவிடர் கழகம் நிர்வகித்து வருகிறது. ஆகையால் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளதால் பெரியாரிஸ்டுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.