Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் இபிஎஸ்ஐ சந்திக்க மறுப்பா? டெல்லியில் நடந்தது என்ன? ஜெயக்குமார் பரபரப்பு தகவல்..!

திமுக தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு உரிமைத் தொகை, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட  எந்தவிதமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வைத்து மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனாவை வைக்கட்டும். இந்த அரசாங்கம் விளம்பர அரசியலுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள். 

PM modi refuse to meet EPS? What happened in Delhi? Jayakumar information..!
Author
Chennai, First Published Jul 25, 2022, 3:07 PM IST

திமுக அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வைத்து மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனாவை வைக்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 27ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் இருக்கிற திரளபதி முர்மு அதிமுக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சொத்து வரி உயர்வு, மின்சாரம் கட்டணம் உயர்வு கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதையும் படிங்க;- டெல்லி கதவு க்ளோஸ்.. எடப்பாடி எங்க பக்கம் வந்தே ஆகணும் - ஓபிஎஸ் ஆதரவாளர் அதிர்ச்சி பேட்டி.!

PM modi refuse to meet EPS? What happened in Delhi? Jayakumar information..!

திமுக அரசை கண்டித்து, சென்னையில் இதுப்போன்ற ஆர்ப்பாட்டத்தை கண்டதில்லை என்றவாறு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 27-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் சார்பில் நடைபெறும். இதுதொடர்பாக, அதிமுக அமைப்பு சார்பில் 9 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் குறித்து, வேண்டுமென்றே தவறான தகவல்கள் செய்தியாக பரப்பிவிடப்படுகிறது. அதிமுக அலுவலக காரணமாக தான் டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னைக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்னை வந்ததாக தெரிவித்தார். சென்னை வருகை தரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க;-  அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்குங்க... ஸ்ட்ரைட்டாக ஆர்பிஐக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்

PM modi refuse to meet EPS? What happened in Delhi? Jayakumar information..!

திமுக தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு உரிமைத் தொகை, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட  எந்தவிதமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வைத்து மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனாவை வைக்கட்டும். இந்த அரசாங்கம் விளம்பர அரசியலுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகழை பாடுகின்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு லேபிள் ஓட்டுவது, பெயிண்ட் அடிப்பது தான் திமுக அரசு செய்து வருகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கவேண்டும்.

இதையும் படிங்க;-  என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

PM modi refuse to meet EPS? What happened in Delhi? Jayakumar information..!

அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி உயர்தியதற்கு, நிதியமைச்சர் பி.டி.தியாகராஜன் கடிதம் எழுதினால் மட்டும் போதாது மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கூறினார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான கேள்விக்கு, ஓ.பி.எஸ் ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றுகிறார் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios