டெல்லி கதவு க்ளோஸ்.. எடப்பாடி எங்க பக்கம் வந்தே ஆகணும் - ஓபிஎஸ் ஆதரவாளர் அதிர்ச்சி பேட்டி.!
கட்சியை விட்டு எடப்பாடி நீக்கப்பட்டு விட்டார். பணத்திற்கு விலை போனவர்கள் எடப்பாடி பக்கமும், பாசம் பணிவு உள்ளவர்கள் பன்னீர்செல்வம் பக்கமும் இருக்கின்றனர்.
எடப்பாடிக்கு டெல்லியில் அனைத்து கதவும் அடைக்கப்பட்டு விட்டது. டெல்லியில் இருந்து அழைப்பு வந்தால் ஓபிஎஸ் மோடியை சென்று சந்திப்பார் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தன்னைக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர்களின் 8 பேர் சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி;- அதிமுக 100 ஆண்டு காலம் தழைத்தோங்க வேண்டும் என்பதால்தான் இரு முறை பன்னீர் செல்வத்தை முதல்வராக்கினார் ஜெயலலிதா. கட்சியை பன்னீர் செல்வம் கட்டிக் காப்பார். எங்களுக்கு தலைவர் ஒருங்கிணைப்பாளர்தான். கட்சி ஒருங்கிணைப்பாளரிடம்தான் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் 5 ஆண்டு காலம் இருக்கிறது. தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கமே இருக்கின்றனர்.
இதையும் படிங்க;- மக்களவையில் ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு வைக்க துடிக்கும் இபிஎஸ்.. அப்பாவை போலவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்த ஓபிஆர்!
கட்சியை விட்டு எடப்பாடி நீக்கப்பட்டு விட்டார். பணத்திற்கு விலை போனவர்கள் எடப்பாடி பக்கமும், பாசம் பணிவு உள்ளவர்கள் பன்னீர்செல்வம் பக்கமும் இருக்கின்றனர். அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கமும், மனோகரும் கட்சி அலுவலகத்தில் இருந்து பணத்தை திருடி விட்ட செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. நாங்கள் அதிமுக அலுவலகத்தை பார்வையிடத்தான் சென்றோம்.
பொதுக்குழு அறிவிக்கப்பட்டதற்கு முதல் நாளில் ரவுடிகள் பலர் கட்சி அலுவலகத்தில் மது அருந்தினர். இரவு 12 மணிக்கு சினிமா பாட்டு போட்டு கேட்டு கொண்டிருந்தனர். எனவே கட்சி அலுவலகத்தை நேரில் பார்க்க ஓபிஎஸ் சென்றார். ரவுடிகள் எங்களை தாக்கியதால் தான் அன்று பிரச்சனை ஏற்பட்டது. சி.வி.சண்முகம் எங்கள் மீது புகாரளிக்கும்போது நிதானமாக இருந்தார் என நீங்கள் கூறினால் நான் பதிலளிக்க தயார். எடப்பாடிக்கு டெல்லியில் அனைத்து கதவும் அடைக்கப்பட்டு விட்டது. டெல்லியில் இருந்து அழைப்பு வந்தால் ஓபிஎஸ் மோடியை சென்று சந்திப்பார். நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என ஓபிஎஸ் கூறியுள்ளதால் எடப்பாடி வந்தால் கட்சியில் சேர்த்து கொள்வோம் என்று கூறினார்.
இதையும் படிங்க;- என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?