Asianet News TamilAsianet News Tamil

என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு ஏன் அவசரம் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

OPS appeal petition related to AIADMK General Committee... hearing next week
Author
Delhi, First Published Jul 23, 2022, 6:46 AM IST

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு அளித்தது. கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பின் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க;- எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்.. உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

OPS appeal petition related to AIADMK General Committee... hearing next week

இந்நிலையில், ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு ஏன் அவசரம் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். அதிமுக தரப்பில் இருந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க;-  அப்பாவை தொடர்ந்து மகனுக்கும் ஆப்பு ரெடி? விடாமல் அடிக்கும் இபிஎஸ்.. மிரளும் ஓபிஎஸ்.!

OPS appeal petition related to AIADMK General Committee... hearing next week

எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட தலைமை நீதிபதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். அதே நேரத்தில் உரிய தேதியை சொல்ல முடியாது தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios