எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்.. உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பதிலளிக்க இபிஎஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளார் இபிஎஸ் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளனர்.
இதையும் படிங்க;- எடப்பாடி சிறையில் இருந்து கட்சி நடத்துவாரா.? வெயிட் பண்ணி பாருங்க.. இபிஎஸ்க்கு ஜர்க் காட்டும் புகழேந்தி.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என பிரதான மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு புகழ் எடப்பாடியாரே! நீங்க சட்டம்-ஒழுங்கு பற்றி பேசலாமா? போட்டு தாக்கிய முரசொலி
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, இடைக்கால மனு ஆகஸ்ட் 16ம் தேதியும், பிரதான மனு செப்டம்பர் 1ம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது.