Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி சிறையில் இருந்து கட்சி நடத்துவாரா.? வெயிட் பண்ணி பாருங்க.. இபிஎஸ்க்கு ஜர்க் காட்டும் புகழேந்தி.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்றும், ஸ்டாலின் ஆட்சியில் தவறு செய்த எவரும் தப்பிக்க முடியாது என்றும் பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார். 

Will Edappadi run the party from jail? Wait and see. Bangalore pugalendi says.
Author
Chennai, First Published Jul 21, 2022, 3:45 PM IST

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்றும், ஸ்டாலின் ஆட்சியில் தவறு செய்த எவரும் தப்பிக்க முடியாது என்றும் பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார். அதிமுக பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டது  பாலுக்கு பூனையை காவல் வைத்ததைபோல என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட களேபரங்களுக்குப் பின்னர் இடைக்கால பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி- பன்னீர்செல்வம் இடையேயான இந்த மோதலில் அதிமுக தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு கிடைத்த இமாலய வெற்றி கருதப்படுகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான பெங்களூரு புகழேந்தி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Will Edappadi run the party from jail? Wait and see. Bangalore pugalendi says.

இதையும் படியுங்கள்: திறக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்..! ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் திருட்டா..? உண்மை நிலவரம் என்ன..?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-  இன்று என்னுடைய பிறந்தநாள், கடந்த 25 ஆண்டு காலமாக ஜெயலலிதா அவர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறேன், அந்த வகையில் இன்று அவரது நினைவிடத்திற்கு வந்து  மரியாதை செலுத்தினேன். நேற்று வந்த தீர்ப்பு எந்த வகையிலும் ஓபிஎஸ் அவர்களுக்கு பின்னடைவு இல்லை, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருக்கிறோம், அதுமட்டுமின்றி ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்.? அன்று காவல்துறை கதவைத் திறந்து வைத்திருந்தால் கொலை நடந்திருக்கும், இரண்டு தரப்பினருக்கும் இடையில் தான் மோதல் நடந்தது ஆனால் ஒரு தரப்பு என தவறுதலாக கூறப்படுகிறது.இதையும்

படியுங்கள்:  president election results: குடியரசுத் தலைவர் தேர்தல்: திரெளபதி முர்மு முன்னிலை: அதிக எம்பிக்கள் ஆதரவு

எம்ஜிஆர் ஜானகி அவர்களால் தலைமைக்கழகம் அதிமுகவுக்கு வழங்கப்பட்ட்டது. ஜெயலலிதா அவர்களால் முதலமைச்சராக்கபட்டவர் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு பிரச்சினை மிக சுலபமாக தீர்த்து வைத்தவர் அவர்தான், நீதிமன்றம் என்ன மக்கள் மன்றமே எங்கள் பின்னால் இருக்கிறது, ஜூலை 11ம் தேதி நடந்த அனைத்து ஆக்கிரமித்திருக்கும் தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் தான் காரணம், அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி சிறையிலிருந்து கட்சியை நடத்துவாரா? போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்ததைப் போல இந்த வழக்கிலும்  தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும், சபாநாயகர் உன்னதமானவர்,

Will Edappadi run the party from jail? Wait and see. Bangalore pugalendi says.

நியாயமானவர் எனவே நியாயமாக தீர்ப்பு வழங்குவார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை, அதிமுக பொருளாளராக சீனிவாசனை நியமிக்கப்பட்டிருப்பது பாலுக்கு பூனையை காவல் வைப்பதுபோல அதிமுக பணத்திற்கு சீனிவாசனை காவல் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios