அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்குங்க... ஸ்ட்ரைட்டாக ஆர்பிஐக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்
அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவததாக இபிஎஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் புதிய அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் நீக்கப்பட்டதை அடுத்து பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிமுக வங்கி கணக்குகள் உள்ள கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க;- என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
மேலும் அதில், அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் எழுதிய கடிதத்தில், என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால், ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க;- மக்களவையில் ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு வைக்க துடிக்கும் இபிஎஸ்.. அப்பாவை போலவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்த ஓபிஆர்!
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க வேண்டும். கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்கு பணப்பரிவர்த்தனை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாம்தான் அதிமுக பொருளாளர் என குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ் நியமித்துள்ளார். தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை ரிசர்வ் வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல் தரவேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.