தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்து அந்த நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்தது தொடர்பாக அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாயகம் திரும்பிய ஈழத் தமிழர் குடியுரிமை" என்ற தலைப்பில், 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்போம்; அவர்களின் நலனுக்காக 'வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை' என்ற ஒரு புதிய துறையை உருவாக்குவோம்; அவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, 

மீண்டும் மழை எச்சரிக்கை.! நாளை உருவாகிறது புயல் சின்னம்.? எந்த எந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மறுவாழ்விற்காக துவக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தின் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதையும், அவர்கள் வசித்து வரும் இடங்களை காலி செய்யச் சொல்வதையும் பார்க்கும்போது “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரனான நடவடிக்கைக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதை தி.மு.க. அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. 
, 'விடியலை நோக்கி' என்று சொல்லிவிட்டு, 'விரக்தியை நோக்கி' அனைத்துத் தரப்பு மக்களையும் தி.மு.க. அரசு அழைத்து சென்று கொண்டிருக்கிறது. இது 'திராவிட மாடல் அரசு அல்ல. ‘வெறுப்பு மாடல்' அரசு. 

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களா..? போலீசாரின் அதிரடி சோதனையால் பரபரப்பு

தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் சுமார் 4,053 ஹெக்டேர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இந்த 4,053 ஹெக்டேரில், 2,152 ஹெக்டேர் நிலப்பரப்பினை வளத் துறையிடம் ஒப்படைக்குமாறு அண்மையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும், இதன் விளைவாக வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்திலுள்ள ஏழு பிரிவுகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் நிலைமை உருவாகி உள்ளதாகவும், ஓய்வூதியப் பலன்களை அளிக்கப்படுவதற்கு முன்பே வீடுகளை காலி செய்து தருமாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபரப்பு தகவல்..!

தோட்டத் தொழிலாளர்களை அதிகாரிகள் மிரட்டுவதாகவும் மேற்படி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய வனத் துறை அமைச்சரோ தொழிலாளர்களுக்கு எதிரான கருத்தினை தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதனை இலாபத்தில் இயங்க வைப்பதுதான் ஓர் அரசினுடைய நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டு. இதைச் செய்யாமல், மேற்படி நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத் துறையிடம் ஒப்படைக்குமாறு ஆணை பிறப்பிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலாகும். TANTEA நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டுமென்றும், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வந்துள்ள சூழ்நிலையில், ஆள் பற்றாக்குறை என்று சொல்வது ஏற்புடையதல்ல.

 ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் TANTEA நிறுவனத்தின் நிலத்தை பறித்து, அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறுவது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம். ஒரு வேளை அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டுமென்றால், அங்குள்ள தொழிலாளர்களை வைத்தே அதை இயற்கை வனமாக மாற்றுவதும், தேயிலைத் தோட்டத் தொழிலளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை` வேலையை விட்டு அனுப்புவது என்பதும், இருப்பிடங்களை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் அவர்களை நாடு கடத்துவதற்கு சமம். முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, TANTEA நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத் துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

தவறான சிகிச்சையால் கால் பந்து வீராங்கனை உயிரிழப்பு.!திமுக ஆட்சியில் அரசு துறைகள் அழிந்து வருகிறது.! அண்ணாமலை