மீண்டும் மழை எச்சரிக்கை.! நாளை உருவாகிறது புயல் சின்னம்.? எந்த எந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாக உள்ள நிலையில் வருகிற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

The Meteorological Department has said that heavy rains are likely again due to a new depression over the Bay of Bengal

வட கிழக்கு பருவ மழை தீவிரம்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் கன மழை பெய்தது.  ஏற்கனவே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 44 செ.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக 40 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பாதிப்பு குறைந்து வந்தது. இதனையடுத்து மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு நகர தொடங்கினார். 

தவறான சிகிச்சையால் கால் பந்து வீராங்கனை உயிரிழப்பு.!திமுக ஆட்சியில் அரசு துறைகள் அழிந்து வருகிறது.! அண்ணாமலை

The Meteorological Department has said that heavy rains are likely again due to a new depression over the Bay of Bengal

மீண்டும் புதிய புயல் சின்னம்

தற்போது தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான சாதகமான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், படிப்படியாக மழையின் அளவும் தீவிரமடையயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios