கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபரப்பு தகவல்..!
வலதுகால் மூட்டு ஜவ்வு பிரச்சனை காரணமாக கடந்த நவம்பர் 7ம் தேதி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிக்கு Arthroscopy சிகிச்சையை அதிநவீன தொழில்நுட்ப வாயிலாக வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்துள்ளனர்.
கால்பந்து வீராங்கனைக்கு பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வலதுகால் மூட்டு ஜவ்வு பிரச்சனை காரணமாக கடந்த நவம்பர் 7ம் தேதி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிக்கு Arthroscopy சிகிச்சையை அதிநவீன தொழில்நுட்ப வாயிலாக வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்துள்ளனர். இருப்பினும் மருத்துவர்களின் கவனக்குறைவால் போடப்பட்ட கட்டு காரணமாக ரத்த ஒட்டம் தடைப்பட்டது.
இதனையடுத்து, கடந்த நவம்பர் 7ம் தேதி அளிக்கட்ட சிகிச்சையை தொடர்ந்து வலி உள்ளிட்ட காரணத்தினால் 8ம் தேதி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 மூத்த மருத்துவ நிபுணர்கள் மாணவிக்கு சிகிச்சை அளித்து வந்ததனர். நள்ளிரவுக்கு மேல் சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு என தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலை 7.15 மணிக்கு மாணவி பிரியா உயிரிழந்தார்.
தவறான சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.