Asianet News TamilAsianet News Tamil

அமைச்சரை சுற்றி வரும் கூலிப்படை! பதற்றத்தில் தெறிக்கும் தென்மண்டல போலீஸ்!

அ.தி.மு.க. சைடிலும் இப்படியான ரத்த சரித்திரங்கள் துவங்கிவிடுமோ? எனும் அச்சம் எழுந்துள்ளது தென் மண்டல போலீஸுக்கு. குறிப்பாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில்தான் இப்படியான சம்பவங்கள் நடந்துடுமோ என்று பதறுகிறது போலீஸ். அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

Minister udhayakumar Mercenary
Author
Tamil Nadu, First Published Feb 1, 2019, 5:16 PM IST

தென் தமிழக அரசியலுக்கும் ரத்த வாடைக்கும் அவ்வளவு நெருக்கம். அதிலும் தி.மு.க. ஆட்சிகாலமென்றால் அக்கட்சி நிர்வாகிகள் ரத்த சகதியில் சாயும் காட்சிகள் பல அரங்கேறியதை தமிழகம் அறியும்.  மாஜி அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை, மாஜி அமைச்சர் ஆலடி அருணா கொலை, அழகிரியின் வலது கரமான பொட்டு. சுரேஷ் கொலை, தினகரன் அலுவலக எரிப்பு சம்பவம்...என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத நிலையில், ஆளுங்கட்சியாக அ.தி.மு.க.தான் எல்லா வகையிலும் அதகளம் செய்து கொண்டிருக்கிறது. இச்சூழலில், அ.தி.மு.க. சைடிலும் இப்படியான ரத்த சரித்திரங்கள் துவங்கிவிடுமோ? எனும் அச்சம் எழுந்துள்ளது தென் மண்டல போலீஸுக்கு. குறிப்பாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில்தான் இப்படியான சம்பவங்கள் நடந்துடுமோ என்று பதறுகிறது போலீஸ். அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. Minister udhayakumar Mercenary

அதாவது அமைச்சர் உதயகுமாரின் ஆதரவாளரும், மதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளருமான ஐயப்பனை, முன்னாள் ஒன்றியத்தலைவர் தமிழழகனின் ஆதரவாளர்கள் அரிவாளால் வெட்டினர். ஐயப்பன் ஒருவழியாக உயிர் தப்பிவிட்டார். ஆனால் இதற்கு தமிழை பழிக்குப் பழி வாங்க துடிக்கிறதாம் ஐயப்பன் தரப்பு. இருவருக்கும் இடையில் பிரச்னைக்கு காரணமே காண்ட்ராக்ட் எடுப்பது மணல் திருட்டு உள்ளிட்டவைதானாம். வெட்டுப்பட்ட ஐயப்பனே ‘ஏய் அமைதியா இருங்கப்பா, என்ன கேக்காம எதுவும் பண்ணிப்புடாதீய! எந்த சம்பவமும் வேணாம்யா.’ என்று சொல்லியும் அடங்குவதில்லையாம் அவரது ஆதரவாளர்கள். Minister udhayakumar Mercenary

இதற்கிடையில், ஐயப்பனின் இந்த நிலைக்கு காரணமான தமிழழகனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கள் தரப்புக்கு ஆதரவாக எதையும் செய்யவில்லை என்று இந்த பிரச்னையில் வருத்தம் காட்டுகிறது ஐயப்பன் தரப்பு. இதற்கிடையில், அமைச்சர் உதயகுமார் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் அவரோடு ஒட்டி நடக்கிறாராம் தமிழழகன். Minister udhayakumar Mercenary

இந்த மாதிரியான நேரங்களில் நேரம் பார்த்து அவரை இழுத்துப்போட்டு தட்டுவதற்கு ஒரு கூலிப்படை டீம் ஒன்று சுத்து போட்டுக் கொண்டிருக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள், குறிப்பாக இவர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னையில் பாவம் அமைச்சர் உதயகுமாருக்கு எந்த சின்ன இடைஞ்சலும் நடந்துட கூடாது! இரண்டு தரப்பையும் எச்சரித்து வையுங்கள்! என்று சட்டம் ஒழுங்கு போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளதாம் உளவுத்துறை. மை காட்!

Follow Us:
Download App:
  • android
  • ios