Asianet News TamilAsianet News Tamil

பந்தாவே இல்லாத மனிதர் ரஜினி.!! அவரை சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நெகிழ்ச்சி...!!

அவர் பலத்த பந்தா காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன் ஆனால் எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக உள்ளார் ரஜினி. 

Lankan Tamil ex cm vigneshwaran  appreciation actor rajini
Author
Chennai, First Published Jan 17, 2020, 2:13 PM IST

ரஜினியை நேரில் சந்தித்தால் அவரது உயரிய பண்பு தெரியவரும் எனவும்,  அவரை சந்தித்ததை பாக்கியமாக நினைக்கிறேன் எனவும்,  இலங்கையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நெகழ்ச்சி தெரிவித்துள்ளார் .  நடிகர் ரஜினிகாந்த் சினிமா கூத்தாடி ,  பஸ் கண்டக்டர் ,  தமிழர்களுக்கு எதிரானவர் என்று கூறுபவர்கள் ,  ஒருமுறை அவரை நேரில்  சந்தித்தால் அவரின் உயரிய பண்பு தெரியவரும் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.  கடந்த  சில தினங்களுக்கு  முன்னர் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை விக்னேஸ்வரன்  சந்தித்து கலந்துரையாடினார் .

Lankan Tamil ex cm vigneshwaran  appreciation actor rajini

அச் சந்திப்பு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது , இந்நிலையில்  விக்னேஸ்வரன் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார், அதில்,  ரஜினியை நேரில் சந்தித்த போது அவரின் அன்பு ,  எளிமை ,  ஆன்மீக விசாரத்தில் உள்ள நாட்டம் ,  குழந்தைபோல் வாய்விட்டு சிரிக்க கூடிய  இறுக்கம் தவிர்த்த சுபாவம் ,  அசைக்க முடியாத இறை நம்பிக்கையுடைய பேச்சு, போன்ற குணாதிசயங்களை கண்டதுடன்  ரஜினி பந்தாவே இல்லாத மனிதர் என்பதை கண்டு வியந்தேன்.  சிறிய புகழை பதவியை அடைந்து விட்டாலே பலர் தலைகால் தெரியாது ஆடுகின்றனர்.  பாரதம் கடந்து ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில்,

  Lankan Tamil ex cm vigneshwaran  appreciation actor rajini

அவர் பலத்த பந்தா காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன் ஆனால் எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக உள்ளார் ரஜினி.  ரஜினியை நேரில் சந்தித்ததால் அவரின் உரிய குணநலன்களை நான் அறிந்து கொண்டேன் .  அந்த சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறேன் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .  தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களை ஒரு அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும் அவர் விளக்கும் அளித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios