வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு தொகுதி பக்கம் எட்டி பார்க்காதவர் கமல்ஹாசன் - வேலுமணி குற்றச்சாட்டு
கமல்ஹாசன் மக்களிடம் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டு தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை என கோவையில் நடைபெற்ற ஐ.ஜே.கே மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டினார்.
கோவை காளப்பட்டி அருகே உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டல மாநாட்டில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது, திமுக ஆட்சியாக இருந்தாலும் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தான். கோவையில் 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை நாங்கள் கொடுத்துள்ளோம். கமல்ஹாசன் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றுக் கொண்டு இன்னும் எட்டி பார்க்கவில்லை.வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கோவைக்கு பல திட்டங்களை பேசி வருகிறார்.
மக்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும்; அதை நான் செய்து காட்டுவேன் - சசிகலா உறுதி
தமிழக அமைச்சர்களையும் இங்கு கோவையில் காணோம். எடப்பாடியார் பிரதமர் அருகில் அமர்ந்து இருந்தார். தமிழ்நாட்டில் இன்றைய ஆளும் கட்சி கோவையை புறக்கணிக்கிறது. எடப்பாடி தலைமையில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். புறக்கணித்த திட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என்று அவர் பேசினார்.
குற்றவாளிகளை மதம் சார்ந்து பார்க்கக் கூடாது; இஸ்லாமிய அமைப்புகளுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை