Asianet News TamilAsianet News Tamil

மக்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும்; அதை நான் செய்து காட்டுவேன் - சசிகலா உறுதி

மக்களுக்கு எந்தவித கெடுதலும் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும் என்று தெரிவித்துள்ள வி.கே.சசிகலா அதனை நான் செய்து காட்டுவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

aiadmk is the strong opponent party of tamil nadu says vk sasikalaf
Author
First Published Jul 24, 2023, 8:35 AM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயத்தை முடித்து விட்டு விமானம் மூலம் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொங்கு மண்டலத்தில் சுற்றுபயணம் மன நிறைவை தந்தது.

எனது சுற்றுபயணம் தொடர்ந்து நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் நிச்சயமாக இணைவோம். இணைப்பு முயற்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தற்போதய அதிமுகவின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, அதை நீங்கள் தான் பார்கிறீரக்ளே. ஜெயலலிதா இருக்கும் போது கட்சி எப்படி இருந்தது. இப்போது அந்த நிலைமை இருக்கிறதா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

குற்றவாளிகளை மதம் சார்ந்து பார்க்கக் கூடாது; இஸ்லாமிய அமைப்புகளுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

அதிமுகவில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது பணி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். விரைவில் சந்திப்பு நடைபெறும். தமிழக அரசு (திமுக)ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்க்கு பிறகு ஒரு முதல்வர் மக்களுக்காக பேசாமல், தனிப்பட்ட நபருக்காக பேசுவது இதுவே முதல்முறை. உங்களிடம் தவறில்லை என்று நிரூபியுங்கள் அதற்கு ஏன் மத்திய அரசை குறை கூறுகீர்கள் என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்பதே இல்லை. குடிகாரர்களுக்கு ஆதவராக அமைச்சர் தானாக பேசவில்லை, அவரை பேச வைத்திருக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி நல்ல மனிதர் தான். மக்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும். அதை நான் செய்து காட்டுவேன். அரசாங்க ஊழியர்களுக்கு முறையாக சம்பளம்  உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. 

கூலி உயர்வு கேட்டு உயிர் நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தாமிரபரணியில் நினைவிடம் வேண்டும் - நயினார் நாகேந்திரன்

திமுகவிற்கு வாக்களித்ததால் மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். அது மாற வேண்டுமென்றால் அது எங்கள் ஆட்சி வந்தால் மட்டுமே முடியும். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் சிறந்த எதிர் கட்சியாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios