மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு தாமிரபரணியில் நினைவிடம் வேண்டும் - நயினார் நாகேந்திரன் கோரிக்கை
கூலி உயர்வு கேட்டு தாமிரபரணியில் உயிர் நீத்த போராட்ட தொழிலாளர்களுக்கு தாமிரபரணியில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1999ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றனர்.
அப்போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் 24ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் பாஜக சார்பில் தாமிரபரணியில் உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குற்றவாளிகளை மதம் சார்ந்து பார்க்கக் கூடாது; இஸ்லாமிய அமைப்புகளுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தாமிரபரணி நதியில் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி உயிர் நீத்தவர்களுக்கு தமிழக அரசு நினைவிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசு நினைவிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் பாஜக சார்பில் தாமிரபரணி ஆற்றில் நினைவிடம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் பாஜகவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறுது - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு