Asianet News TamilAsianet News Tamil

அன்று தவழ்ந்து முதல்வர் பதவி பெற்று.. சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் இபிஎஸ்.. சும்மா இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்.!

மெகா கூட்டணியில் யார் இருப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்பட்டு வருகிறோம். விரைவில் மாவட்ட வாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Edappadi Palanisamy who betrayed Sasikala.. panneerselvam
Author
First Published Nov 8, 2022, 10:58 AM IST

எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சி காலத்தில் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயக விரோதமாக செயல்பட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். உரிய நேரத்தில் வெளியிடப்படும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான். புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் கடமை தனக்கு தான் உள்ளது. நான் தூய்மையானவன் என்பதால் தான் முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா எனக்கு கொடுத்தார். நம்பிக்கை துரோகி யார் என்பது தமிழக மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது. 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் அணிக்கு புதிதாக மாநில நிர்வாகிகள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்..! யார், யார் தெரியுமா.?

Edappadi Palanisamy who betrayed Sasikala.. panneerselvam

கூவத்தூரில் சசிகலா தான் பழனிசாமிக்கு முதல் பதவி கொடுத்தார். ஆனால், அவருக்கே துரோகம் செய்தவர்தான் இந்த நம்பிக்கை துரோகி பழனிசாமி இபிஎஸ் தனது ஆட்சி காலத்தில் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயக விரோதமாக செயல்பட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். உரிய நேரத்தில் வெளியிடப்படும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரை எதிர்த்து வாக்களித்தேன். திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என வேலுமணி, தங்கமணி என்னிடம் வந்து பேசினர். அதனால், தான் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தேன். தான் அளித்த ஆதரவால் தான் 5 வாக்கில் பழனிசாமி அரசு காப்பாற்றப்பட்டது. 

இதையும் படிங்க;- அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி..! இபிஎஸ் பேசியதில் தவறில்லை- அண்ணாமலை

Edappadi Palanisamy who betrayed Sasikala.. panneerselvam

ஆனால், எனக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. ஏற்கனவே கூறியது போல் துணை முதலமைச்சர் பதவியை பிரதமர் மோடி ஏற்க சொன்னதால் தான் ஒப்புக் கொண்டேன். தான் ஜானகி அணியில் இருந்தேன் என சொல்கிறார்கள். ஆமாம் நான் ஜானகி அணியில் தான் இருந்தேன். ஆனால், தனது கடும் உழைப்பில் சம்பாதித்த பணத்தில் எம்ஜிஆர், அதிமுக கட்சி அலுவலகத்தை ஜானகி பெயரில் தான் வாங்கினார். மெகா கூட்டணியில் யார் இருப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்பட்டு வருகிறோம். விரைவில் மாவட்ட வாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- தெம்பும் திராணி இல்லாத ஸ்டாலின்! எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது.. எகிறும் இபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios