ஓபிஎஸ் அணிக்கு புதிதாக மாநில நிர்வாகிகள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்..! யார், யார் தெரியுமா.?
ஓபிஎஸ் தனது அணிக்கு புதிய கொள்கை பரப்பு செயலாளராக மருது அழகுராஜ் மற்றும் வ.புகழேந்தியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதே போல மாநில நிர்வாகிகளையும் நியமனம் செய்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதன் காரணமாக இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் மோதிக்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து எடப்பாடி அணிக்கு போட்டி அளிக்கும் விதத்தில் தான் தான் அதிமுக எனவும், புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தற்போது தனது அணிக்கு மருது அழகுராஜை மற்றும் வ. புகழேந்தியை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கழக உடன் பிறப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக அரசு out ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!
மாநில நிர்வாகிகளை நியமித்த ஓபிஎஸ்
இதே போல புதிதாக அமைப்பு செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு இணை செயலாளர்களையும் ஓபிஎஸ் நியமித்து அறிவித்துள்ளார், அதன் படி
1. மு. கவிதா இராசேந்திரன் அவர்கள் முன்னாள் தலைவர், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி) கழக அமைப்புச் செயலாளர்
2. திரு. S.D. காமராஜ் அவர்கள் (திருநெல்வேலி மாவட்டம்) கழக அமைப்புச் செயலாளர்.
3. திரு. PVK பிரபு B.A., அவர்கள் (நாகப்பட்டினம் மாவட்டம்) கழக அமைப்புச் செயலாளர்
4. திரு. P.H. சாகுல் அமீது அவர்கள் (கரூர் மாவட்டம்) கழக அமைப்புச் செயலாளர்
5. திரு. ஜெ. கோசுமணி அவர்கள் (சென்னை மாவட்டம்) கழக மீனவரணிச் செயலாளர்
6. திரு. V.R. ராஜ்மோகன், B.E.,அவர்கள் (மதுரை மாவட்டம்) கழக இளைஞரணிச் செயலாளர்
7. திரு. G.மோகன் அவர்கள், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்
8. திரு. துறையூர் கே. கணேஷ் பாண்டியன் அவர்கள் (தூத்துக்குடி மாவட்டம்) கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்
9. திரு.A.C.லோகு அவர்கள் (சென்னை மாவட்டம்) கழக மீனவரணி இணைச் செயலாளர்
10. திரு.G.ஜெயராமன் அவர்கள், (விழுப்புரம் மாவட்டம்) கழக மீனவரணி துணைச் செயலாளர்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு உடன் பிறப்புகளை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதையம் படியுங்கள்