Asianet News TamilAsianet News Tamil

அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி..! இபிஎஸ் பேசியதில் தவறில்லை- அண்ணாமலை

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்ற எடப்பாடி பழனிசாமி கருத்தில் தவறில்லையெனவும்,  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில்தான் அமையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

Annamalai has said that he will form an alliance under the leadership of AIADMK in the parliamentary elections
Author
First Published Nov 7, 2022, 3:57 PM IST

இட ஒதுக்கீடு தீர்ப்பு- வரவேற்க்கதக்கது

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சின்னப்பா கணேன் என்பவர் எழுதிய ' மோடியின் தமிழகம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற  தீர்ப்பு வரவேற்கத்தக்ககது. கடந்த காலத்தில் சட்டநாதன் ஆணையம் மற்றும் மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிராக செய்தது போல் மீண்டும் திமுக இந்த சட்டத்திற்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்து வருகிறது.

ஓபிசி , பிசி , எம்பிசி , பட்டியலின இடஒதுக்கீடு இதன் மூலம் பாதிக்கப்படாது என தெரிவித்தார்.  10 சதவீதம் என்பது குறைவு என்றாலும் பல சமூகத்தினருக்கு இது உதவும் என கூறினார். இந்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த திமுக அரசு  நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  இந்தியாவில் ஓபிசி மக்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம். அதனால்தான் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

Annamalai has said that he will form an alliance under the leadership of AIADMK in the parliamentary elections

தீய சக்தி திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்? ஒரே போடாக போட்ட டி.டி.வி. தினகரன்..!

 அதிமுக தலைமையில் கூட்டணி

பால் விலை உயர்வால் விவசாயிகளுக்கு 3 ரூபாய்தான்  கிடைக்கிறது ஆனால் ஆவினுக்கு 12 ரூபாய் லாபம் கிடைப்பதாக தெரிவித்தார். எனவேதான் விவசாயிகளுக்கு எந்த பலனும் தராத  பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15 ம் தேதி  தமிழகத்தில் அனைத்து ஒன்றிய தலைநகரங்களிலும் 1200 இடங்களில் தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக  கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி , எனவே 2024 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில்  மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் தவறில்லை என தெரிவித்தார். தேசிய ஐனநாயக  கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது என கூறியவர், அதிமுக , பாஜகவினர் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறோம். குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து இல்லாமல் பாஜகவினர் அனைத்து தொகுதியிலும் வேலை செய்து வருவதாக கூறினார். 

Annamalai has said that he will form an alliance under the leadership of AIADMK in the parliamentary elections

கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! குற்றவாளிகள் 6 பேர் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்..! என்ன காரணம் தெரியுமா.?

மனுஸ்மிருதி மொழி பெயர்பு தவறானது

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை  திரும்ப பெற வேண்டும் என்ற திமுகவின் கருத்து அபத்தமானது , கீழ்த்தரமானது என தெரிவித்தார்.  திமுக கூட்டணியில் உள்ள  அனைத்து எம்பிகளும் தங்களுக்கு அடிமை என காட்டுவதற்காக கையெழுத்து வாங்குவதாக கூறினார். தமிழகத்திற்கு விரோதமாக ஆளுநர் இருப்பதாக கூறும்  திமுக ஆதாரபூர்வமாக குற்றம்சாட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

 ஆளுநருக்கு எதிரான மனநிலையில் இருந்து திமுக வெளிவர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  திருமாவளவனுக்கு  வேலை இல்லாமல் மனுஸ்மிருதியை பிரதி எடுத்து பொது வெளியில் வழங்கி வருகிறார். ஆர்எஸ்எஸ் குறித்த அம்பேத்கர் கருத்தை திருமாவளவன் படிக்க வேண்டும். திருமாவளவன் பிரதி எடுத்து கொடுக்கும்  மனுஸ்மிருதியின் மொழி பெயர்ப்பு தவறானது என கூறினார். மனுஸ்மிருதி குறித்து  தவறாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்திலிருந்து தான் மனுஸ்மிருதி என பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
 

இதையும் படியுங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல.. ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம்.. திமிரும் திருமா..!

Follow Us:
Download App:
  • android
  • ios