விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல.. ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம்.. திமிரும் திருமா..!
இந்திய கடற்படையால் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பூம்புகாரை சேர்ந்த மீனவர் வீரவேல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
தலைமறைவு பயங்கரவாத இயக்கம் போல செயல்படும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன்;- இந்திய கடற்படையால் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பூம்புகாரை சேர்ந்த மீனவர் வீரவேல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை காப்பாற்றி மருத்துவர்கள் நெஞ்சார்ந்த நன்றி. அவர் நன்றாக உடல் தேறியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது. அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு 2 லட்சம் வழங்கியுள்ளது. ஓராண்டுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் வீரவேல் உள்ளார்.
இதையும் படிங்க;- சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு.. முதல்வர் ஸ்டாலின்..!
எனவே தமிழக அரசு வழங்கிய நிதி உதவி போதாது. கூடுதலாக பொருள், நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்திருந்ததாலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக காவல்துறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
பாஜக என்பது வெளிப்படையாக இயங்கக்கூடிய ஒரு அரசியல் இயக்கம். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற ஒரு அரசியல் கட்சி. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அது இருக்கிறது. வாக்கு வங்கியை நம்பி இயங்குகிறது. ஆகவே, பாஜகவுக்கு சில பொறுப்புகள் இருக்கிறது. சட்டபூர்வமாக பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறது.
ஆனால், ஆர்எஸ்எஸ் அப்படி பதிவு பெற்ற இயக்கமாக இல்லை. உறுப்பினர்களை கொண்ட ஆதிகாரப்பூர்வ இயக்கமாக இல்லை. மாநில பொறுப்பாளர்களை நியமிக்கக்கூடிய இயக்கமாகவும் இல்லை. தலைமறைவு பயங்கரவாத இயக்கம் போல செயல்படும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். திரைமறைவில் செயல்படும் இயக்கம் என்பதாலே அதனை நாங்கம் எதிர்க்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல என திருமாவளவன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- மனுஸ்மிருதி பிரதியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய திருமா.! ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்ப்பது ஏன்..! புதிய விளக்கம்