மனுஸ்மிருதி பிரதியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய திருமா.! ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்ப்பது ஏன்..! புதிய விளக்கம்
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் இந்தியாவிலேயே ஆர் எஸ் எஸ் க்கு இடம் இருக்காது என தெரிவித்த திருமாவளவன், இது சமூக நீதிக்காண மண் என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மனுஸ்மிருதி புத்தகம் வழக்கிய திருமா
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஆயிரம் பேருக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 1927ல் டிசம்பர் மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் மனுஸர் நூலை எரித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய நிலையில் மனுஸ்மிருதி புத்தகத்தை விலையில்லாமல் தற்போது வழங்கி வருகின்றோம். தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பேருக்கு விலை இல்லாமல் மனுஸ்மிருதி புத்தகம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனுஸ்மருதி என்பது இந்துக்களின் வேத நூலாகவும் வழிகாட்டு நூலாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
பிஜேபிக்கு தனி கோட்பாடு கிடையாது
மனுஸ்மிருதி அடிப்படையில் தான் குடும்ப நிகழ்வுகள் சடங்குகள், சம்பிரதாயங்கள், திருமணங்கள், ஈம சடங்குகள் என அனைத்தும் நடைப்பெற்று வருகிறத. பெண்கள் சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது மனுஸ்மிரிதியின் வழிகாட்டுதல். ஆர் எஸ் எஸ் யின் கொள்கை மனுஸ்மிருதி புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். எனவே ஆர் எஸ் எஸ் இன் வழிகாட்டுதலை மக்களுக்கு வெளிக்கொண்டு வர இந்த புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர் எஸ் எஸ் அமைப்பு இதனை தங்களது கலாச்சார கொள்கையை ஏற்றுக்கொண்டு நடந்து வருகிறார்கள். சமூக நீதி சுதந்திரம் , சகோதரத்துவம், சமத்துவம் கூடாது என்பதுதான் மனுஸ்மிருதியின் கருத்து அதை அடிப்படை கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி. பிஜேபிக்கு தனியாக கோட்பாடு எதுவும் இல்லை ஆர்எஸ்எஸ் இன் கோட்பாடு தான் பிஜேபி கோட்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் மக்களை ஒன்று சேரவிடாமல் பிளவுபடுத்தி வைத்திருக்கும் அதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பு என தெரிவித்தார் .
ஆர்எஸ்எஸ் இந்தியாவில் இருக்காது
பேரணியில் பங்கேற்பவர்கள் ஆதார் அட்டைகளை காண்பிக்க வேண்டும் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு என்று அலுவலகம் ஏதும் கிடையாது தலைமறைவு இயக்கத்தை போன்று பயங்கரவாத பாசிச இயக்கமாக ஆர்எஸ்எஸ் இயங்கி வருகிறது. வட இந்தியாவில் கொட்டம் அடிப்பது போல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டம் அடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இது சமூக நீதி மண் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் காலூன்றினால் தமிழகத்தில் மதவெறி அதிகம் ஏற்படும் என்றும் ஆர்எஸ்எஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டால் இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸ் இருக்காது என தெரிவித்தார். பாஜக பேரணியை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை, ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்க்கிறோம். மக்கள் புரிந்துக் கொண்டால் ஆர்எஸ்எஸ் இந்தியாவிலேயே இருக்காது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்