திரெளபதி படமும், கன்னி மாடம் படமும் வெவ்வேறு சமூகங்களுக்கு ஆதரவாக ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், திரெளபதி படத்தை மட்டும் சில அரசியல் கட்சிகள் புகழ்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

திரெளபதி படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பல தலைவர்கள் படத்தை பார்த்து விட்டு வெகுவாக ஆதரவு தெரிவித்தனர். அதேவேளை கன்னிமாடம் படத்தை பார்த்து விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்து இருந்தார். 

இதனை மையப்படுத்தி தனியார் தமிழ் செய்தி சேனல் ஒன்று நியூஸ் கராத்தே நிகழ்ச்சியில் திரெளபதிக்கு நிறைய ஆதரவு தருவதாகவும், கன்னிமாடம் படத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’விளம்பரப்படுத்தியதற்கு நன்றி.. உங்கள் காழ்ப்புணர்ச்சி எங்கள் வளர்ச்சி.. ஆமா வேல் பிரசாத் அவர்களே.. நீங்க தான அந்த வைஷாலி நாயுடுன்னு டுப்ளிக்கேட் ஐடில சுத்துனீங்க.. காலம் பதில் சொல்லும் உங்களுக்கு..’’என கேள்வி எழுப்பியுள்ளார்.