கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக செய்தி பரப்பிய கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலின் நிர்வாகிகளை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்தபோது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ் கடவுள் முருகனை இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லம் முன்பு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைத்தளத்தில் முருகக் கடவுள் குறித்து ஆபாசமாக சித்தரித்தவர்கள் அனைவரையும் கைது செய்வதோடு, அந்த யூடியூப் ஊடகத்தையும் தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். முருகக் கடவுளை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேபோல, தஞ்சாவூரில் மாநகர தலைவர் கண்ணன் மற்றும் சந்திர போஸ் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கறுப்பர் கூட்டம் யூடியுப் பக்கத்தில் வெளியான சர்ச்சை கருத்துகளுக்கு எதிராக கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டது. https://www.facebook.com/mariappan.anandhanatarajan/videos/275486590571834/

இதே போல, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற  பாஜகவினர் யூடியூப் சேனலை தடை செய்ய கோரியும், கந்த சஷ்டி கவசம் பற்றி தவறாக வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து கருப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசனை 15 நாள் காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.