சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் விலகவில்லை. அதற்குள் புதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வேதனையோடு ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க? என்று புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த மாதம் காணாமல் போனார். இச்சிறுமியை போலீசார் தேடிவந்த நிலையில்  வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி ராஜா. வயது 27. என்கிற இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க? என்று இந்த  சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்  ஹர்பஜன் வேதனையுடன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்."செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா". என ட்வீட் செய்துள்ளார்.