பெரும்பான்மையினரின் வாக்குக்காக சிறுபான்மையினரின் கல்வியில் கை வைக்கும் மத்திய அரசு - பீட்டர் அல்போன்ஸ் ஆதங்கம

பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்காக மத்திய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையை குறைத்துள்ளதாக மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

central government 38 percent decrease the minority people scholarship money says peter alphonse

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாலோசனை  கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி., விஜய் வசந்த்,  மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், சிறுபான்மையினர் கல்வி நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை  சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், மத்திய அரசு நாட்டில் மத சிறுபான்மையினர் இருக்க கூடாது என்று நினைக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகையை 38 சதவீதம் குறைத்துள்ளது. இதனால்  சிறுபான்மை மக்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் நிலை பாதிக்கப்பட்டு  உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.

தூக்கத்தில் இயக்கப்பட்ட லாரி; தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்

மத்திய அரசு இதை செய்வதன் மூலம் பெரும்பான்மை மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எண்ணுகிறார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்கு கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு இது போன்று உதவித்தொகைகளை  குறைக்கிறது. இதன்மூலம் மத்திய அரசு சிறுபான்மையினர்  வாழ்வதற்கான உரிமைகளை மறுப்பதாக பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; சிசிடிவியால் சிக்கிய கில்லாடி பெண்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios