கடலூர் மாவட்டத்தில் தூக்கத்தில் இயக்கப்பட்ட லாரி; தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரியில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

16 year old boy killed road accident in cuddalore district

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஒரு வழி பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் 16 வயது சிறுவன் வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராகவேந்திரா கோவில் முன்பு சிறுவன் வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவன் தர தர என இருசக்கர வாகனத்தோடு சேர்த்து இழுத்து வரப்பட்டு படுகாயமடைந்தான். 

படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். உடனடியாக. டிப்பர் லாரி ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே இறங்கி வேகமாக ஓடி அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி காவல் துறையினர் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; சிசிடிவியால் சிக்கிய கில்லாடி பெண்கள்

மேலும் உயிரிழந்த சிறுவன் சந்தோஷ் புவனகிரி திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவன் என்பதும், டிப்பர் லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த புவனகிரி பகுதியில் இது போன்ற டிப்பர் லாரியால் அடிக்கடி  விபத்து ஏற்பட்டு உடல் நசுங்கி உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே இது போன்ற விபத்துகளை தடுத்திட உரிய நடவடிக்கை வேண்டும் என்பதே புவனகிரி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அடுக்கடுக்காக கேள்வி கேட்ட அமைச்சர் பொன்முடியை ஒரே பதிலில் வாயடைக்க வைத்த மூதாட்டி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios