கொரோனா சம்பந்தமாக  விஜயபாஸ்கர் கொடுத்த சில பேட்டிகள் முதல்வர் பழனிசாமி தரப்பிற்கு கோபத்தை ஏற்பத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விஜயபாஸ்கரை பேட்டி கொடுக்க கூடாது என்று முதல்வர் கட்டளை இட்டதால் அவர் ஒதுங்கிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ, விஜயபாஸ்கர் கொரோனா கருவிகள் வாங்குவதில் அதிக கமிஷன் வைத்ததால் அவரை எடப்பாடி ஒதுக்கி வைத்ததாக கூறுகிறார்கள். 

இப்படிப்பட்ட அரசியல் சிக்கல் எதுவும் தன்னுடைய கொரோனா பணிகளை பாதிக்காத வகையில் பீலா ராஜேஷ் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான பணிகளை முன்னின்று நடத்துவது பீலா ராஜேஷ்தான். விஜயபாஸ்கருக்கு ஆலோசனை வழங்குவது, ஐடியாக்களை கொடுப்பது, திட்டங்களை வகுத்து கொடுப்பது, சரியான புள்ளி விவரங்களை கொடுப்பது பீலா ராஜேஷ்தான் என்கிறார்கள். இவர் விஜயபாஸ்கரின் குட் புக்கிலும் இருக்கிறார். முதல்வர் பழனிசாமியின் குட்புக்கிலும் இருக்கிறார். 

இவர்கள் இருவருக்கும் ஒரு இணைப்பு பாலம் போல பீலா ராஜேஷ் செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பலத்த சர்ச்சையை ஏற்பத்தி இருக்கிறது. அதில், ’’அதிமுக அரசே...! முதல்வர் பழனிசாமியே... பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா இது..?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வைரஸ் கட்டுப்படுத்தும் பொறுப்பை மீண்டும் வழங்கிடு. ஒட்டு மொத்த சுகாதார துறையினரையும் ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் அஜெண்டாவை களத்தி அமல்படுத்த வைத்த பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் உறவினரான சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷை டிஸ்மிஸ் செய். மதவாத அரசியலுக்கு தலை சாய்க்காதே... மக்களை பாதுகாத்திடு’’ என அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.