சென்னை பூந்தமல்லியில்ஆராதனா என்ற பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு பாதுகாவலர்களாக தாமஸ், ஆறுமுகம் கிருஷ்ணா என்பவர்கள் இருந்துள்ளனர். ஆனந்தி என்பவர் வார்டனாக இருந்துள்ளார்.

இதற்கிடையில் விடுதியில் தங்கி உள்ள அழகிய பெண்களை குறி வைத்து, அவர்களை ஆனந்தியின் ஆண் நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்களாக இருந்த ஆறுமுகம் கிருஷ்ணா தாமஸ் உடன் நட்பாக பழக உதவி உள்ளார். விடுதியில் தங்கி உள்ள அழகிய பெண்களை தேர்வு செய்து அவர்களின் பெயர் விவரத்தோடு தனது ஆண் நண்பர்களுடம் பழக வைத்துள்ளார் ஆனந்தி  

இப்படி பல பெண்களை  இவர்கள் பப்பிற்கு அழைத்து செல்வது, மது அருந்த செய்வதும் என சில மாதங்களாக தொடர்ந்து உள்ளது. இதற்கிடையில், மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் இதே விடுதியில் தங்கி  சட்டப்படிப்பை படித்து வந்துள்ளார். இந்த பெண்ணிற்கும் இதே போன்ற பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளதாக தெரிகிறது. அதில் முக்கியமாக பாதுகாவலராக இருந்த தாமஸ் மற்றும் வார்டன் ஆனந்தி தாமஸின் மனைவி மகாலக்ஷ்மி உட்பட இதில் பலருக்கும் தொடர்பு இருந்து உள்ளது.

இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட பெண், மதுரையில் இருக்கும் தன் தாயிடம் தெரிவிக்க அவர் விடுதிக்கு நேரில் வந்து வார்டன் ஆனந்தியை தாக்கி உள்ளார். இதன் பேரில் அப்பெண் மற்றும் பெண்ணின் தாயார் மீது ஆனந்தி முந்திக்கொண்டு புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் போலீசார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊர் விட்டு ஊர் வந்து படிக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட பாலியல் தொந்தரவு கொடுத்து, மன நிம்மதி இழக்க வைத்து, படிப்பை தொடர முடியாமல்  செய்துள்ள வார்டன் மற்றும் பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் தாய் மீது புகார் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும்.பொள்ளாச்சி போல வேறு ஏதாவது இருக்குமா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு எழுந்துள்ளது