Asianet News TamilAsianet News Tamil

கர்ப்பிணிப் பெண்கள் வெந்நீரில் குளிப்பது நல்லதா..? பக்க விளைவுகள் வருமா..?

கர்ப்ப காலத்தில் பெண்கள் வெந்நீரில் குளித்தால், அது குழந்தையின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். இதற்கு வெந்நீரின் வெப்பநிலையே காரணம்.

pregnancy tips what happens if you take hot bath during pregnancy in tamil mks
Author
First Published Apr 17, 2024, 3:14 PM IST

ஒவ்வொரு பெண்ணும் தாயாக மாறுவதை விரும்புகிறார்கள். சொல்லபோனால், தாயாக மாறுவது ஒரு அழகான அனுபவம் என்றே சொல்லலாம். இந்த சமயத்தில், கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பலவிதமான மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே, அவர்கள் தங்கள்  உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். 

குறிப்பாக ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தூக்கம் என ஒவ்வொன்றிலும் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும். இதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் 
சிறப்பாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான் குளிப்பது.

குளிப்பது என்பது உடலை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி மனமும் புத்துணர்ச்சி அடையும். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வெந்நீர் குளியல் என்று சிலர் சொல்லுகிறார்கள். உண்மையில், கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்திற்கு வெந்நீர் குளியல் சிறந்ததா..? இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கர்ப்பிணிகளிக்கு வெந்நீர் குளியல் சிறந்ததா..?
கருத்துப்படி, கர்ப்பிணிப் பெண்கள்  முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், கர்ப்பிணிகள் வெந்நீரில் குளித்தால், 
இது உடலின் வெப்பநிலையை பாதுகாப்பற்ற நிலைக்கு உயர்த்தி, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கும். அப்படி ஒருவேளை குளித்தால், தண்ணீர்  சூடாக இருக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஒரு ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் வெந்நீரில் குளிப்பது குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, அவர்களின் பிறவி குறைபாடுகளுக்கும் வழிவகுக்கிறது.

குழந்தைக்கு ஏற்படும் ஆபத்து:
கர்ப்பிணிப் பெண்கள் சூடான நீரில் குளித்தால், அவர்களின் உடல் வெப்பநிலையை பாதுகாப்பற்ற நிலைக்கு உயர்த்தலாம். இதனால் 
உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.
இந்த அதிகரிப்பு வயிற்றில் இருக்கும் 
வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இதனால், குழந்தைகளுக்கு நரம்பு குழாய் குறைபாடுகள் மற்றும் பிற வளர்ச்சி சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக, குழந்தையின் உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாதங்களில் இது நடக்கலாம்.

அதுமட்டுமின்றி, வெந்நீர் வெப்பத்தால் குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைந்து ரத்த ஓட்டமும் குறைய தொடங்கும். இதனால் தான்  குழந்தையின் வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் வளர்ச்சியும் தடைபடும்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்து:
கர்ப்பிணிப் பெண்கள் வெந்நீரில் குளித்தால் அவர்களின் உடலுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக, வெந்நீரின் வெப்பம் கர்ப்பிணிகளுக்கு நீரிழப்பு மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இதனால்,  தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம். உடல் அதிக வெப்பமடைந்தால், அதனால் உடல்
அசௌகரியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் பொதுவாக வரும் வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை ரொம்பவே மோசமாக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios