அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! 

ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கோடை விடுமுறையில் உள்ளனர்

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வது பெரும் பாடாக உள்ளது. இந்த நிலையில் நாளை மறுதினம் அதாவது 4 ஆம் தேதியிலிருந்து 29 ஆம் தேதி வரையில், கத்திரி வெயில் நடக்க உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பனிப்புயல் தமிழகத்திற்கு ஓரளவிற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த சமயத்தில், ஒடிசா கடற்கரையில் நாளை கரையைக் கடப்பதால் தமிழகத்திற்கு எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் வானிலை நிலவரப்படி இந்த வார இறுதி வரை தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அக்னி வெயில் மற்றும் கோடை வெயிலில் இருந்து மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் செய்வது பற்றி முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஜூன் 10ஆம் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெப்பம் அதிகரிக்கும் பொருட்டு அந்த தேதியில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏற்கனவே கோடைவிடுமுறையில் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மாணவ-மாணவிகள் தற்போது பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்படும் என்ற அறிவிப்பு வெளியானதும் படு குஷியாகி உள்ளனர்