Asianet News TamilAsianet News Tamil

Bank Account : இறந்தவரின் வங்கி கணக்கு.. அதிலிருந்து பணம் எடுக்க முடியுமா? அதில் ஏதும் சிக்கல் உண்டா?

Bank Account of Dead Person : ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து அவருடைய குடும்பத்தை சேர்ந்த நபர்களே பணத்தை எடுத்தாலும் அது சட்டத்துக்கு புறம்பானது என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

Is it legal to drop money from dead persons account see what is the procedure ans
Author
First Published Apr 28, 2024, 11:39 AM IST

வங்கி கணக்கு 

ஒரு மனிதன் எதிர்பாராத நிலையிலோ அல்லது வயது மூப்பின் காரணமாகவோ இறந்து விடும்பொழுது, அவருடைய இறப்புக்கு பிறகு வங்கிக் கணக்கிலிருந்து அவருடைய உறவினர்கள் ஏடிஎம் வாயிலாக பணத்தை எடுக்கின்றனர். ஆனால் இறந்த அந்த மனிதர் தனது வங்கி கணக்கில் "பிக்சட் டெபாசிட்" முறையில் சேர்த்து வைத்த பணத்தை அவர்களால் எடுக்க முடியாது. 

அப்பொழுது அவருடைய இறப்பு சான்றிதழ் உட்பட உரிய ஆவணங்களை வங்கியில் செலுத்தி அந்த பிக்சட் டெபாசிட் பணத்தை பெற குடும்பத்தினர் முயற்சிக்கும் பொழுது, குறிப்பிட்ட அந்த நபர் இறந்த பிறகு அவருடைய கணக்கிலிருந்து ஏடிஎம் வாயிலாகவோ அல்லது காசோலை வாயிலாகவோ பணம் எடுக்கப்பட்திருப்பத்தை அறிந்தால் அது மிகப்பெரிய சிக்கலாக மாறும். 

பயன்படுத்தாத உங்கள் வங்கிக் கணக்கு.. Deactivate செய்யாவிட்டால் ஏதும் சிக்கல் வருமா? வல்லுநர்கள் சொல்வதென்ன?

காரணம் இந்திய அரசின் விதிகளின்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய கணக்கில் இருக்கும் பணத்தை காசோலையாகவோ அல்லது ஏடிஎம் கார்டு மூலமாக எடுப்பது தவறு. இது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கவே கொண்டுவரப்பட்ட ஒரு முறை. அப்படி என்றால் இறந்த அந்த மனிதனுடைய பிக்சட் டெபாசிட்டில் அல்லது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கவே முடியாதா? 

சட்டரீதியாக அணுகுவது எப்படி?

ஒவ்வொருவரும் தங்களுக்கு என வங்கி கணக்கு திறக்கும் பொழுது அதற்கென தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரையோ, அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவரையோ நாமினிகளாக சேர்ப்பது வழக்கம். அப்படி சேர்க்கும் பட்சத்தில் அந்த மனிதர் இறந்த பிறகு அவருடைய இறப்பு சான்றிதழோடு, நாமினிக்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

நாமினிகள் தங்களுக்கென KYC வழிமுறைகளை முடிக்க வேண்டும், உரிய அரசு அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களில் Attestation பெற்று, இறந்தவரின் இறப்பு சான்றிதழோடு, அனைத்து ஆவணங்களையும் வங்கியில் ஒப்படைக்கும் பட்சத்தில் அந்த பணத்தை வங்கியில் இருந்து பெறமுடியும். இந்த வழிமுறை வங்கிக்கு வங்கி மறுபடலாம். 

குறிப்பு : நாமினியாக நியமிக்கப்படும் நபர் அந்த பணத்திற்கு வெறும் காவலரே, அவர் அந்த பணத்தை இறந்தவரின் வாரிசுகளுக்கு சமமாக பிரித்தளிக்க வேண்டும். வாரிசுகளில் குழப்பம் ஏற்பட்டால், அதை சட்ட ரீதியாகவே தீர்த்துக்கொள்ளவேண்டும்.  

இறந்தவர் நாமினியே இணைக்கவில்லை என்றால்?

அதேபோல ஒருவர் வங்கி கணக்கை தொடங்கும் பொழுது தனக்கென நாமினியை நியமிக்காமல் இருந்தாலும், அவர் இறந்த பிறகு Legal Heir எனப்படும் வாரிசு சான்றிதழை, இறப்பு சான்றிதழோடு இணைக்க வேண்டும். அதிலும் உரிய அரசு அதிகாரிகள் சான்றளிக்க வேண்டும். வாரிசுகள் அனைவரும் உறுதி மொழி ஏற்ற பிறகு அவர்கள் இறந்தவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுதமுடியும். 

மியூச்சுவல் ஃபண்டில் 15-15-15 ஃபார்முலா மூலம் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்... எப்படி தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios