Asianet News TamilAsianet News Tamil

2018 ஆண்டில் வைரலாகிய #ஹாஸ்டேக்!

#whoareyou

தூத்துக்குடி போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை வைத்து பல ஹாஸ்டேக்குகள் வெளிவந்தன. அதில் முத்தாய்ப்பாக இடம் பிடித்தது #whoareyou என்ற ஹாஸ்டேக்குதான். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்காகத் தூத்துக்குடி சென்றார் நடிகர் ரஜினி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினியைப் பார்த்துநீங்க யாரு?’ என்று எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலானது.

2018 vairal hashtags
Author
Chennai, First Published Dec 28, 2018, 11:42 AM IST

சமூக ஊடகங்களில் ஹாஸ்டேக் மூலம் தங்கள் எதிர்ப்பையோ ஆதரவையோ எதிர்ப்பது தற்போதைய ஃபேஷனாகிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு அரசியல் ஹாஸ்டேக்குகள்  பலமுறை கவனம் ஈர்த்தது. ஹாஸ்டேக் பயன்படுத்துவதில் பொதுமக்களைவிட கட்சிகளின் தொழில்நுட்ப பிரிவுகளின் கைகளே அதிகம் இருந்தன. திட்டமிட்டு ஹாஸ்டேக் பிரச்சாரத்தை கட்சிகள் முன்னெடுத்தன. இந்த ஆண்டு தமிழகத்தில் கவனம் ஈர்த்த சில ஹாஸ்டேக்குகள் எவை?

#Gobackmodi

2018 vairal hashtags

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டம் களைகட்டிய வேளையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டங்கள் சென்னையில் தீவிரமாயின. சமூக ஊடகங்களிலும் அது எதிரொலித்தது. #Gobackmodi என்ற ஹாஸ்டேக்கைப் பயன்படுத்தி மோடி எதிர்ப்பாளர்கள் உருவாக்கி சமூக ஊடகங்களில் பயன்படுத்தினர். இந்த ஹாஸ்டேக் தமிழகம், இந்தியா தாண்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.

#whoareyou

தூத்துக்குடி போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை வைத்து பல ஹாஸ்டேக்குகள் வெளிவந்தன. அதில் முத்தாய்ப்பாக இடம் பிடித்தது #whoareyou என்ற ஹாஸ்டேக்குதான். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்காகத் தூத்துக்குடி சென்றார் நடிகர் ரஜினி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினியைப் பார்த்து ‘நீங்க யாரு?’ என்று எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலானது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகள் என்ற கோணத்தில் ரஜினி பேசியதால், கோபமடைந்த நெட்டிசன்கள் ‘#Whoareyou' என்ற ஹாஸ்டேக்கை ரஜினிக்கு எதிராகப் பயன்படுத்தி வைரலாக்கினார்கள்.

#Gobackstalin

2018 vairal hashtags

திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டு சென்னை திரும்பினார். #Gobackmodi ஹாஸ்டேக்குக்குப் பழிவாங்குவதற்காக பாஜகவினர் #Gobackstalin என்ற ஹாஸ்டேக்கை சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கினார்கள். அதற்குப் போட்டியாக #welcomestalin என்ற ஹாஸ்டேக்கை திமுகவினரும் பயன்படுத்த, இரு கட்சிகளும் சமூக ஊடங்களில் ஹாஸ்டேக் சண்டைப் போட்டுக்கொண்டார்கள்.

#HBDKalaignar95

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை மையமாக வைத்து இந்த ஆண்டு பல ஹாஸ்டேக்குகள் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்தன. கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி #கலைஞர்95, #HBDKalaignar95 எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஹாஸ்டேக்குகளை திமுகவினர் வெளியிட்டார்கள். உடல்நிலை குன்றியிருந்த நிலையில், இந்த ஹாஸ்டேக்குகளைப் பயன்படுத்தி கருணாநிதியை நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

#Getwellsoon

2018 vairal hashtags

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் #Getwellsoon என்ற ஹாஸ்டேக் மூலம், அவர் உடல்நலம் பெற பயன்படுத்தினார்கள். கருணாநிதி மறைந்த பிறகு #Ripkalaingar என்ற ஹாஸ்டேக் மூலம் அஞ்சலி செலுத்திய நெட்டிசன்கள், கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கிடைக்காததால் #Wewantmarina என்ற ஹாஸ்டேக் மூலம் கோரிக்கை வைத்தனர்.

#sarkar

‘சர்கார்’ படம் வெளியாவதற்கு முன்பு ‘கார்ப்பரேட் கிரிமினல்’ என விஜய் பேசும் வசனத்தை வைத்து தமிழக பாஜக தொண்டர்கள் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார்கள். படம் வெளியான பிறகு அரசின் இலவச திட்டங்களை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் படம் இருப்பதாகக் கூறி தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்புகளுக்கு விஜய் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ‘#sarkar’ என்ற படத்தின் தலைப்பு தொடர்ந்து சமூக ஊடங்களில் வைரலாகவே இருந்தது.

2018 vairal hashtags

 #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்த வல்லபாய் பட்டேல் சிலையில் தமிழ் வாசகம் தவறாக இடம் பெற்றதை ஹாஸ்டேக் மூலம் நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். அந்தச் சிலையில் இடம் பெற்றதாகக் கூறப்பட்ட #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற வாசகத்தைப் பயன்படுத்தி ஹாஸ்டேக் மூலம் கவனம் ஈர்த்தார்கள்.

#statueofcorruption

திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்புக்காக வந்த சோனியாவையும் கருணாநிதி சிலையையும் வைத்து பாஜகவினர் ஹாஸ்டேக் மூலம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். #statueofcorruption, #Gobacksoniya என்ற சமூக ஊடங்களில் வைரலாக்க முயற்சித்தார்கள். பதிலுக்கு #statueofkalaingar, #Welcomesonia போன்ற ஹாஸ்டேக்குகளை திமுகவினர் சமூக ஊடங்களில் பரப்பி, மீண்டும் ஒரு முறை ஹாஸ்டேக் சண்டையைப் போட்டார்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios