கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவை பார்த்த தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாக உள்ளனர் என சிம்பு கன்னட சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு காவிரி நீர் கேட்பது குறித்து சிம்புவின் உருக்கமாகவும் கன்னடமக்களுக்கு ஆதரவாகவும் பேசினார். சிம்புவின் இந்த பேச்சுக்கு கர்நாடக மக்களின் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டார். சிம்புவின் இந்த கோரிக்கையை ஏற்ற  கன்னட மக்கள் நாங்கள் தண்ணீர் தர தயார் என்று கூறிய வீடியோக்களை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, சிம்பு கர்நாடக டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில்,

கேள்வி: ரஜினி, கமல் அரசியல் குறித்து உங்கள் கருத்து?

சிம்பு: ரஜினி, கமல் அரசியல் குறித்து கேட்கிறீர்கள். யாரும் யாரையும் எதிர்க்கக் கூடாது. அவர்களுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து சில கருத்துகளை நல்ல விதமாக சொன்னாலும்  அவர்களுக்கு கெட்ட பெயரை கொடுக்கிறது. அரசியல் ரீதியான விளையாட்டுகளால் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மற்றபடி அவர்களை ஆதரிக்க யாருக்கும் எந்தப் பிரச்சினை இல்லை.

கேள்வி: அரசியல்வாதிகள் மக்களை திசை திருப்புவதாக நீங்கள் குற்றம் சாட்டுவது எந்த அளவிற்கு உண்மையானது?

சிம்பு: கங்கை, காவிரி, யமுனா ஆகியோரின் பிள்ளைகளாக நாம் இருக்கிறோம். அந்த தாய்கள் எந்த பிள்ளையிடமும் பாகுபாடு காட்டமாட்டார் என்பதை நான் ஏற்கிறோம். ஆனால் ஒரு சில ஊழல் அரசியல்வாதிகள் மக்களின் மனதை மாற்றுகின்றனர். அவர்களின் சுயநலத்துக்காக இதை மாற்றுகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இவர்களின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும்.

கேள்வி; நீங்கள் கன்னட மக்களுக்கு ஆதரவாக உள்ளதாக உங்கள் மீது விமர்சனம் எழுகிறதே?

சிம்பு: நான் கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளேனா. நான் கன்னடர் அல்ல, பக்கா தமிழன். நான் கன்னடர்களை ஆதரிக்கவில்லை, மனிதாபிமானத்தை மட்டும் ஆதரிக்கிறேன்.

கேள்வி: உங்களின் கோரிக்கையை கன்னட மக்கள் ஏற்று தண்ணீர் தருவதாக சொல்கிறார்களே... உங்களின் மனநிலை எப்படி இருக்கு?

சிம்பு: கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவை பார்த்த தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாக உள்ளனர். நான் கன்னடர்களிடம் தண்ணீருக்காக கெஞ்சுகிறேன் என்று சில தமிழர்கள் கூறுவது, இரண்டு மாநில மக்களுக்கும் நடைபெறும் நல்லதை கெடுப்பதற்கான முயற்சியாகும். நல்லது நடந்து விட்டால் அவர்களுக்கு பிரச்சினையாகிவிடும்.  அதனால் மக்களின் மனதை நீர்த்து போக செய்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி பெரும்பாலான மக்கள் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். மனிதாபிமானத்துடன் மக்கள் இருக்கும் போது நாம் தவறாக பேசுபவர்கள் குறித்து கண்டு கொள்ளக் கூடாது.

கேள்வி: உங்களின் கருத்துக்கு சில எதிர்ப்புகள் வரும் என நீங்கள் நினைத்தீர்களா? அதை எப்படி கையாளப் போகிறீர்கள்?

சிம்பு: எனது கருத்துகளால் எனக்கு வருங்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன நடக்கும் என்கிறீர்கள். மனிதன் என்ற அடிப்படையில் நான் மக்களுக்கு நல்லது செய்யவே முயற்சிக்கிறேன். அதையும் தாண்டி எனக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தமிழர்கள், கன்னடர்கள் மட்டுமல்லாமல் மனிதாபிமானத்தில் நம்பிக்கையுடைய இந்திய மக்கள் அனைவரும் எனக்காக நிற்பர். அப்படியிருக்கும் நான் ஏன் எனக்கு ஏற்படும் அசம்பாவிதம் குறித்து கவலைப்பட வேண்டும்.கேள்வி: கன்னட மக்களின் ரியல் ஹீரோவாக இடம்பிடித்தது பற்றி உங்கள் கருத்து?  

சிம்பு: மக்களின் மனநிலையை மாற்றுவது அத்தனை சுலபம் இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து கன்னடர்கள் இது போன்று செய்து தமிழர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டனர். மக்கள் என்ன செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார்களோ அவர்களுடன் கடவுள் துணையாக இருப்பார். அதனால்தான் இந்த மன மாற்றம் சுலபமாக நடந்து விட்டது. இந்த பிரச்சினைகளை எப்போது உடைக்க வேண்டும் என்று கடவுள் முடிவு எடுத்துவிட்டால் அதை செய்துமுடித்துவிடுவார்.மனிதாபிமானத்தை மதித்த கன்னட மக்களும் தமிழக மக்களும்  ஒற்றுமையுடன் சேர்ந்து நமக்கு நல்லதை செய்ய வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்றால் இதை வருங்காலத்திலும் வலியுறுத்துவேன். அதற்காக நான் அரசியல்வாதியோ, தலைவரோ இல்லை. மக்களுடன் மக்களாக துணையிருப்பேன் என இவ்வாறு து யில் கூறியுள்ளார்.