இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 18.05.2023

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 18.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

Top News Today in Tamil From May 18 2023

கள்ளச்சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அது போன்ற புகைப்படம் தானே தவிர, வேறொன்றும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்.!

சீரியல் நடிகை சம்யுக்தா - விஷ்ணுகாந்த் விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய லைவை பார்த்த பின்னர் விஷ்ணுகாந்த் தன்னுடைய உறவினருக்கு போன் செய்து மிரட்டியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சம்யுக்தா.

சம்யுக்தா லைவ் வீடியோ...


கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சு கழிவு நீரை வாகனத்தில் எடுத்து வந்து உக்கடம் கழிவு நீர் தொட்டியில் வெளியேற்றிய வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி நடவடிக்கை!!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு கடை ஊழியர் அருகே சென்ற பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு


ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான ஶ்ரீசந்த் பரமானந்த் ஹிந்துஜா (புதன்கிழமை) காலமானார். ஹிந்துஜா சகோதரர்களில் மூத்தவரான அவருக்கு வயது 87.

எஸ்.பி. ஹிந்துஜா காலமானார்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா முதலிய அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு

ராஷ்மிகா, புஷ்பா படத்தில் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், மிகவும் சிறப்பாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்க்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

21 உயிர்களை பலி வாங்கிய கள்ளச்சாராய விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கொலை வழக்காக மாற்றியுள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு

கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ஒயின் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டெல்லி டியீட்டி ஃப்ரீ பாண்டிங் ஒயின் வாங்கிய்வர்களுக்கு ரிக்கி பாண்டிங் ஆட்டோகிராஃப் போடப்பட்ட கூகரா பேட் பரிசாக வெல்லும் வாய்ப்பை அளித்துள்ளது. ரிக்கி பாண்டிங் மற்றும் பென் ரிக்ஸ் என்ற விருது பெற்ற ஆஸ்திரேலியன் ஒயின் தயாரிப்பாளரின் கூட்டமைப்பில் இந்த பாண்டிங் ஒயின்ஸ் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி விமான நிலையத்தில் பாண்டிங் ஒயின்ஸ்

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு விரிவுப்படுத்த வேண்டாம் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ஆர். என். ரவி தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆர் என் ரவி கடிதம்...

வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மின் உற்பத்திகான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு வட சென்னை மின் உற்பத்தி நிலையில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். மின் பற்றா குறை இல்லாததால் தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் காரணமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின்தடை குறித்து அமைச்சர் விளக்கம்..

ஒ.பி.எஸ் டி.டி.வி தினகரன் சந்திப்பைக் கண்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ விமர்சனம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின்போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்ததோடு, அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலிகளால் விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீலகிரி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை

வங்கி கணக்குகள் தற்காலிகமாக லாக் செய்யப்படும் என்ற எஸ்.எம்.எஸ் வந்தால் நம்ப வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை..

வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், விபரீத முடிவுகளை மாணவ, மாணவியர் எடுக்க வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் அறிவுரை

ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் ஒருவர் பல பெண்களுக்கு பயன்படுத்திய ஆணுறைகளை தபாலில் அனுப்பி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆணுறைகளை பெண்களுக்கு அனுப்பும் மர்ம நபர்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios