விஷ்ணுகாந்த் இதுக்கு மேல உனக்கு மரியாதையே இல்ல.. உறவினரை மிரட்டியதால் போலீஸ் வரை சென்ற சம்யுக்தா!
சீரியல் நடிகை சம்யுக்தா - விஷ்ணுகாந்த் விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய லைவை பார்த்த பின்னர் விஷ்ணுகாந்த் தன்னுடைய உறவினருக்கு போன் செய்து மிரட்டியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சம்யுக்தா.
இதுகுறித்த வீடியோ ஒன்றையும் தற்போது சம்யுக்தா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்... நான் லைவ் வந்து பேசிய பின்னர் விஷ்ணுகாந்த் என்னுடைய உறவினருக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். போன் செய்து, சம்யுக்தா பற்றி என்னிடம் ஒரு விஷயம் இருக்கு அது பெரிய விஷயம் , 4 மணி நேர வீடியோ மற்றும் சில ஆடியோ உள்ளது. அவரின் பாஸ்ட் லைப் பற்றியெல்லாம் நான் சொல்லிவிடுவேன் என கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் நான் சொன்னால் அவரின் எதிர்காலமே கேள்வி குறியாக மாறிவிடும் என தெரிவித்ததாகவும் சம்யுக்தா தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய உறவினர் மிகவும் பயந்து கொண்டே தான் என்னிடம் சொன்னார். மேலும் விஷ்ணுகாந்த் இனி உங்களுக்கு மரியாதையே கிடையாது. நீங்க போலீஸ் கிட்டையே மரியாதை இல்லாமல் தான் பேசுறீங்க, என்னுடைய பாஸ்ட் பற்றி சொல்ல போறீங்கள் எனக்கு பயமே இல்லை, தாராளமா சொல்லுங்க.
திருமணமான ஒரே வருடத்தில் டைவர்ஸ்! முதல் முறையாக விவாகரத்து குறித்து பேசிய நடிகை சுகன்யா!
எனக்கு ஒரு விஷயத்துக்கு மட்டும் தான் பயமா இருக்கு. என குறிப்பிட்டு ஒரு விஷயத்தை மட்டும் பேசி, நீங்க அவ்வளவு கீழ்த்தனமா போய்டுவீங்களானு தெரியல, அது நீங்க சொன்ன விஷயம் தான், நீங்க செஞ்ச விஷயம் தான். இதை பற்றி சொல்லி அவங்களை மிரட்டி இருக்கீங்க. நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க, என எனக்கு தெரியவில்லை.
முன்பு நான் கொடுத்த லைவில் தெளிவாக கூறி இருந்தேன் என் பெயரை கெடுக்கும் விதமாக நடந்து கொண்டால் போலீசிடம் புகார் அளிப்பேன் என்று, நீங்கள் என் உறவினரை மிரட்டியதால் நான் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன், அவங்க போன் செய்த போது, நீங்கள் போனை எடுக்கவில்லை. பின்னர் எடுத்து மிகவும் திமிராக பேசுனீங்க அவ்வளவு கட்சா என பிரித்து மேய்ந்துள்ளார்.
குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு.. வித்தியாசன பெயரை அறிவித்த பூர்ணா!
இதுகுறித்த வீடியோ இதோ....