கொளுத்தும் கோடை வெயில்… மின் தடையால் அவதிக்குள்ளான மக்கள்... மின் துறை அமைச்சரின் சூப்பர் தகவல்!!
தமிழகத்தில் தொடர்ந்து தடையில்லா மின் சேவை வழங்கபடும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து தடையில்லா மின் சேவை வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் விநியோகம் தமிழ்நாடு முழுவதும் மின் தேவை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. 2020-21 தமிழ்நாட்டினுடைய மின் நுகர்வு 16,481 மெகா வாட் தற்போது 2023-24 ஏப்ரல் மே மாதத்தில் 45 நாட்களில் 19,387 மெகாவாட் அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 3000 மெகாவாட் தமிழ்நாடு முழுவதும் உச்ச பட்ச மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நீலகிரி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை... காரணம் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்!!
ஒருசில இடங்கலில் பழுதுகள் காரணமாக பாதிப்புகள் இருப்பினும் சீரான மின் விநியோகம் தமிழகத்தில் அளிக்கபட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் மின் கொள்முதலில் 1312 கோடி அளவில் மின்சார வாரியம் சேமித்துள்ளது. சென்னையில் மின் தேவை 66 மில்லியன் யூனிட் ஆக இருந்த நிலையில் தற்போது 90 மில்லியன் யூனிட்டாக தேவை அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கேபிலை மாற்றி புதிய கேபில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் மின் தடை ஒரு சில இடங்களில் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ், டிடிவி சந்திப்பை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் எடப்பாடிக்கு இல்லை - கடம்பூர் ராஜூ விமர்சனம்
வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மின் உற்பத்திகான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு வட சென்னை மின் உற்பத்தி நிலையில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். மின் பற்றா குறை இல்லாததால் தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் காரணமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.