நீலகிரி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை... காரணம் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்!!

நீலகிரியில் நடைபெற இருந்த ஹெலிகாப்டர் சாகச சுற்றுலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

chennai highcourt banned nilgiris helicopter tourism project

நீலகிரியில் நடைபெற இருந்த ஹெலிகாப்டர் சாகச சுற்றுலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊட்டியில் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக மே 13 முதல் 30 ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியர் டி.முருகவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: சேலத்தில் கூலி தொழிலாளி தலை சிதைக்கப்பட்டு படுகொலை; காவல் துறை விசாரணை

அவரது மனுவில், மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது எனவும், மலைபகுதிகளில் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தும் என்பதால் மக்கள், யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் வனப்பகுதிக்கு அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் ஹெலிபேட் அமைந்துள்ளதால், பறவைகள், வன மற்றும் வீட்டு விலங்குகள் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: உங்கள் ஊரில் மின்தடை எப்போது? TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்!

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின்போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்ததோடு, அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலிகளால் விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios