கழிவு நீரை உக்கடம் கழிவு நீர் தொட்டியில் வெளியேற்றிய வாகன உரிமையாளருக்கு அபராதம்... மாநகராட்சி நடவடிக்கை!!

கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சு கழிவு நீரை வாகனத்தில் எடுத்து வந்து உக்கடம் கழிவு நீர் தொட்டியில் வெளியேற்றிய வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

penalty for vehicle owner who discharges waste water into ukkadam waste water tank

கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சு கழிவு நீரை வாகனத்தில் எடுத்து வந்து உக்கடம் கழிவு நீர் தொட்டியில் வெளியேற்றிய வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் வார்டு எண்.86ல் உக்கடம் சாக்கடை இணைப்பு இல்லாத (UGD) பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவு நீரை வாகனத்தின் மூலம் சேகரித்து மாநகராட்சி கழிவு நீர் ஊற்றும் இடத்தில் இறக்கப்பட்டு, பின் உக்கடம் STP சென்று சுத்திகரிக்கப்பட்டு நல்ல நீராக வெளியேற்றப்படுகிறது.

இதையும் படிங்க: கோவையில் கொட்டித்தீர்த்த மழை... வெப்பம் தனிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

இந்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சு கழிவு நீரை வாகனத்தில் எடுத்து வந்து உக்கடம் கழிவு நீர் தொட்டியில் இறக்கும் பொழுது துர்நாற்றம் மற்றும் பச்சை நிறமாக நுரையுடன் வெளியேற்றும் பொழுது மாநகராட்சி தூய்மைப்பணியாளர் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்த வாகன உரிமையாளர் பழனிசாமி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு… வெளியான அதிர்ச்சி வீடியோ!!

மேலும் உக்கடம் காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் தொழிற்சாலை மற்றும் பிற வணிக நிறுவனங்களிடமிருந்து வெளியேறும் நச்சு கழிவு நீரை கழிவு நீரை உக்கடம் பகுதிக்கு கொண்டு வந்து இறக்கினால் அவர்கள் மீது, அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios