அலர்ட்.. இந்த SMS வந்தா நம்ப வேண்டாம்.. உடனே புகார் அளிக்க வேண்டும்.. எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை..
வங்கி கணக்குகள் தற்காலிகமாக லாக் செய்யப்படும் என்ற எஸ்.எம்.எஸ் வந்தால் நம்ப வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றவாளிகள் பல நூதன வழிகளை பயன்படுத்தி மக்களின் பணத்தை திருடி வருகின்றனர். மேலும் பல்வேறு போலி செய்திகளையும் அனுப்பி, மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எஸ்பிஐ பயனர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. அதில், சந்தேகத்திற்கிடமான செயல்பாடு காரணமாக வங்கி கணக்குகள் தற்காலிகமாக லாக் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கும் இதுபோன்ற செய்தி வந்திருந்தால், வைரலான செய்தி போலியானது என்பதால், பதிலளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக வங்கியில் புகாரளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உங்கள் ஊரில் மின்தடை எப்போது? TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்!
மேலும் பத்திரிகை தகவல் பணியகமான PIB, SBI வாடிக்கையாளர்களுக்கு போலி செய்தி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள PIB "சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டின் காரணமாக, பெறுநரின் கணக்கு தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ வங்கி பெயரில் வரும் செய்தி போலி செய்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் வங்கி விவரங்களைப் பகிருமாறு கேட்கும் மின்னஞ்சல்கள்/SMSகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். அத்தகைய செய்திகளை உடனடியாக report.phishing@sbi.co.in இல் தெரிவிக்கவும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிமைகோரல்: சந்தேகத்திற்கிடமான செயல்பாடு காரணமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கணக்கு தற்காலிகமாக பூட்டப்படும்
உண்மை: உங்கள் வங்கி விவரங்களைப் பகிரும்படி கேட்கும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். அத்தகைய செய்திகளை உடனடியாக report.phishing@sbi.co.in இல் தெரிவிக்கவும்
எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இணைய மோசடிகளுக்கு எதிராக தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. மேலும் “ இணையப் பாதுகாப்பு என்பது வங்கிகளின் கவனம் செலுத்தும் பகுதியாக உருவெடுத்துள்ளது. "எந்த சைபர் சம்பவத்தையும் புகாரளிக்க, report.phishing@sbi.co.in இல் மின்னஞ்சல் செய்யவும் அல்லது சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 ஐ அழைக்கவும். மேலும் தகவலுக்கு, https://cybercrime.gov.in/ ஐப் பார்வையிடவும், கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : லேடி சிங்கம் என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு.. யார் இந்த ஜுன்மோனி ரபா?