Asianet News TamilAsianet News Tamil

இனி வருமானவரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது ...வெங்கையா நாயுடு கடும்எச்சரிக்கை

no one-escape-from-incometax-venkaiah-says
Author
First Published Jan 2, 2017, 10:20 PM IST


ரூபாய் நோட்டு தடைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த ஆய்வு முடிந்த பின், இனி வரும் மாதங்களில் அதிகமான மக்கள் வருமான வரி செலுத்தும் பிரிவுக்குள் கொண்டு வரப்படுவார்கள். தகுதியான நபர்கள் வருமானவரி செலுத்தாமல் இருக்க முடியாது என மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில்பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

குறைந்தவட்டி

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான உயிர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வங்கிக்குள் வந்து விட்டன.  அதனால், இனிவரும் காலங்களில் குறைந்த வட்டியில் மக்களுக்கு கடன் கிடைக்கும். அந்த நடவடிக்கையின் பலன்கள் பிரதமர் மோடியின் புத்தாண்டு அறிவிப்பில் இருந்தே கிடைக்கத் தொடங்கிவிட்டது. இனி அடுத்து மாதங்களில் மக்களுக்கு அதிகமான பலன்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

வெற்றி

கருப்புபணம், ஊழலுக்கு எதிரான போரின் வெற்றியின் தொடக்கமாக இதை கருதுகிறோம். இந்த வெற்றியின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் விதமாக பிரதமர் மோடி ஏற்கனவே ‘பிம்’ ஆப்ஸ்  மற்றும் ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்றதிட்டத்ைத தொடங்கிவிட்டார்.

வருமானவரி

ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், வங்கிக்குள் ஏராளமான பணம் கொண்டு வரப்பட்டுள்ளதே மிகப்பெரிய சாதனையாகும். அது கருப்பு பணமா அல்லது நேர்மையாக சம்பாதித்ததா? என்பது ஆய்விலும், விசாரணையிலும் தெரியவரும். அந்த பணிகள் முடிந்தவுடன், கருப்புபணம் எவ்வளவு? நேர்மையாக சம்பாதித்தது என்பது தெரியவரும்.

அடுத்து வரும் மாதங்களில் வருமான வரி செலுத்தும் பிரிவுக்குள் ஏராளமான நபர்கள் கொண்டு வரப்படுவார்கள். தகுதியான நபர்கள் தவிர்க்க முடியாது அவ்வாறு வரும் போது அரசின் வரிவருவாய் அதிகரிக்கும். நேர்மையான மக்கள் குறைவான வரியும், அதன்பலன்களும் கிடைக்கும்.

போர் தொடரும்

கருப்புபணத்தின் கடைசி ரூபாய் கண்டுபிடிக்கப்படும்வரை அரசின் நடவடிக்கை தொடரும். சுதந்திரத்துக்கு பின்,  எந்த பிரதமரும் அல்லது எந்த அரசும் கருப்புபணம் , ஊழலுக்கு எதிராக இதுபோன்ற மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்தது இல்லை.மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

காங்கிரசுக்கு கேள்வி

காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்கு பின் 60 ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்துவிட்டு, கருப்புபணம், ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கான காரணத்தை கூற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios