Asianet News TamilAsianet News Tamil

வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்; கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி...தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!

Karnataka Budget Kumaraswamy waives farm loan upto Rs 2 lakh
Karnataka Budget: Kumaraswamy waives farm loan upto Rs 2 lakh
Author
First Published Jul 5, 2018, 2:08 PM IST


கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவை தாக்கல் செய்த சில நிமிடங்களிலேயே விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.Karnataka Budget: Kumaraswamy waives farm loan upto Rs 2 lakhமுன்னதாக கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படும் குமாரசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையில் மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கர்நாடகாவில் அமைந்துள்ளது. முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் குமாரசாமியால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, விவசாய கடன் தள்ளுபடி உத்தரவை குமாரசாமி அறிவித்தார். Karnataka Budget: Kumaraswamy waives farm loan upto Rs 2 lakhஇதுகுறித்து அவர் கூறுகையில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.34,000 கோடி செலவாகும் என்றார். Karnataka Budget: Kumaraswamy waives farm loan upto Rs 2 lakhபெங்களூருவின் தண்ணீர் தேவைக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படுவது உறுதி என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios