பாக் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட விமானமான மிராஜ் 2000 போர் விமானமானது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் மற்றும் ரபேல் உற்பத்தி செய்த விமானம் ஆகும். பிரெஞ்ச் நிறுவனத்தின் ஒரு கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இந்த விமானம் கொண்டு தான் இந்தியா பாக் பயங்கரவாதிகளின் முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தியது.

இந்தியா தற்போது 50 மிராஜ் போர்விமானங்களை கொண்டு உள்ளது. ஒரு விமானத்தின் எடை 7,500 கிலோ இருக்கும்.இந்த விமானத்தில் 13,800 கிலோ வெடி பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய நாள் ஒரு முக்கியமான நாளாக பார்க்க முடியும். அதாவது, ரபேல் வழக்கு பெரும் சவாலாக நாடு முழுக்க பேசப்பட்டு, எதிர்கட்சியினரால் பெரும் குற்றச்சாட்டாக பார்க்கப்படும் ஒரு விஷயம். அந்த ரபேல் வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட இருக்கிறது. இதே நாளில் தான் ரபேல் குடும்பத்தை சேர்ந்த மிராஜ் விமானமும் ஊடங்களில் தலைப்பு செய்தியாக உள்ளது. பாக் மீது விமான தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட விமானம் மிராஜ், ரபேல் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரான்சின் டாஸால்ட் நிறுவனம் தான், ரபேல் நிறுவனத்தின் தயாரிப்பை செய்து தருகிறது என்பது கூடுதல் தகவல்.